கத்திப்பாரா சதுக்கம்.. போரூர் மெட்ரோ.. முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து ஆய்வு.. பரபரக்கும் சென்னை
சென்னை: கத்திப்பாரா சதுக்கம் கட்டுமான பணிகள் தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழே கத்திப்பாரா நகர்புற சதுக்கம் என்ற கட்டுமான திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
14 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுவரும் இந்த திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த வரை படங்களை காண்பித்து அதிகாரிகள் முதல்வருக்கு திட்டப்பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.

நகர்ப்புற சதுக்கம்
1.45 லட்சம் சதுர அடி பரப்பளவில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழே அமைந்திருக்கக் கூடிய இந்த சதுக்கம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூரிலிருந்து கிண்டி மற்றும் கத்திபாரா பகுதியில் இறங்கக் கூடிய பயணிகள் இதை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த சதுக்கம் உருவாக்கப்படுகிறது.

கடைகள், பூங்காக்கள்
1.45 லட்சம் சதுர அடியில் அமையும் இந்த சதுக்கத்தில் 56 கடைகள் , பூங்காக்கள், திறந்தவெளி உணவகங்கள் மற்றும் கழிவறைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற நவீன வசதிகள் அமைக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள சென்ட்ரல் சதுக்கத்தை போல கத்திபாரா சதுக்கம் அமைய இருக்கிறது. ஏறக்குறைய இங்கு கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. இந்த நிலையில்தான் முதல்வர் நேரடியாக அங்கு சென்று அதிகாரிகளிடம் விவரம் கேட்டுள்ளார்.

போரூர் மெட்ரோ ரயில்
இதைத்தொடர்ந்து போரூரில் நடைபெறும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகளை பார்வையிடுவதற்காக கிளம்பி சென்றார் ஸ்டாலின். சென்னையில் அடுத்தடுத்து முக்கியமான கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் முதல் முதல்வர் ஆய்வு நடத்தி வருவது கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.
Recommended Video

உள் கட்டமைப்பு
சென்னையில் உள்கட்டமைப்பு வசதியை அதிகரிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேரடியாக அதிகாரிகளை சந்தித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார் என்கிறது அரசு வட்டார தகவல்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications