Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசுக்கு நெருக்கடி.. மாஸ்டர் ப்ளான் போடும் ஸ்டாலின்! ஒன்று சேரும் 8 மாநிலங்கள்.. பறந்த கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு அவர்களது சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றிடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணையச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வின் போது தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.

tamil nadu assembly session 2024 Mk Stalin NEET 2024 2024

தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்தவதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல ஆண்டு காலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தனியே போர் தொடுத்து வந்த நிலையில், நீட் தேர்வின் உண்மையான அவலநிலையை உணர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன” என கூறினார். தொடர்ந்து சட்டசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு அவர்களது சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றிடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,”மருத்துவக் கல்வியின் எதிர்காலம் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாழ்நாள் விருப்பங்கள் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சனை குறித்து டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வரவே இந்தக் கடிதம்.

tamil nadu assembly session 2024 Mk Stalin NEET 2024 2024

நீட் தேர்வின்போது நடந்த முறைகேடுகள் குறித்த சமீபத்திய பல்வேறு செய்திகள் தேசிய தேர்வு முகமையின் (NTA) பலவீனங்களை வெளிப்படுத்தியதோடு, நீட் தேர்வை எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளையும் சிதறடித்துள்ளது. நீட் தேர்வை அதன் தொடக்கத்திலிருந்தே நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதை தாங்கள் அறிவீர்கள். அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை மேல்நிலைத்தேர்வு மதிப்பெண்களின்அடிப்படையில் செய்யப்படவேண்டும் .

தனி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான மிக அதிகமான பயிற்சிக் கட்டணங்களை செலவிட முடியாத கிராமப்புற மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மருத்துவக் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலேயே நாங்கள் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

அந்தவகையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வழங்கக் கோரியும் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நீட் தேர்வுகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் நீட் முறையைக் கைவிடும் வகையில், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு செய்ய வேண்டும்.

ஆகவே, இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தையும், தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த உங்கள் மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு தாம் கேட்டுக் கொள்கிறேன்” என அந்தக் கடிதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+