போனில் வந்த மிரட்டல்.. தலைமைச் செயலகத்தில் குவிந்த வெடிகுண்டு சோதனை நிபுணர்கள்
சென்னை: சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் வந்த மிரட்டலை தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுக்க குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து சில நாட்களாக வலுத்து வரும் நிலையில், அதனுடன் இந்த மிரட்டல் போலீசாரால் தொடர்புபடுத்தி பார்க்கபடுகிறது.

வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைகளையும், வாகன நிறுத்தும் இடங்களில் உள்ள ஒவ்வொரு வாகனங்களையும் சோதனை செய்து வருகிறார்கள்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இதுபோன்ற மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இல்லங்களுக்கும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் வந்து, போலீசார் அங்கும் சோதனைகள் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே எம்ஜிஆர் 32-வது நினைவு தினத்தையொட்டி 24ஆம் தேதி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications