தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு
சென்னை: தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு அளிக்கப்பட்ட பணி நீட்டிப்பு இம்மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிஜா வைத்தியநாதனின் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி தலைமைச் செயலராகப் பணியில் சேர்ந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கே சண்முகம் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் முதுநிலை வேளாண்மை பட்டப்படிப்பு முடித்து, ஐஏஎஸ் தேர்வில் வென்று, 1985ம் ஆண்டு தமிழக அரசின் ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.
இவர் தலைமைச் செயலாளராக பதவி ஏற்கும் முன்னர் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்துள்ளார்.
நிதித் துறை செயலாளராக நீண்ட அனுபவசாலியான கே சண்முகம், எடப்பாடி முதல்வரான பின்னர், தலைமைச் செயலாளராக பதவி ஏற்றார். இவருடைய பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் அவருடைய பதவி காலத்தை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications