கனிம வளம் முதல் ரேஷன் கடை வரை.. 4 முக்கிய ஐஏஏஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அர்ச்சனா பட்னாய்க், கர்சஹாய் மீனா, பூஜா குல்கர்னி, நிர்மல்ராஜ் உள்ளிட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக தொழில் துறை ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி நிர்மல்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழக தொழில் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
மேலும் குடிமைப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னி பணியிட மாற்றம் செய்யப்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுகிறார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (பயிற்சி) துறையின் முதன்மைச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி ஹர்சகாய் மீனா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, குடிமைப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்" இவ்வாறு தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications