TN SSLC Exam results: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாநில பாடப்பிரிவின் கீழ் படிக்கும் மாணவர்களும் தங்கள் ரிசல்ட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

வரும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானதும், அதை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in , dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களுக்கு பதிவு எண்ணையும் பிறந்த தேதியையும் கொடுத்து தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இணையதள நெரிசலைத் தவிர்க்க, மாணவர்கள் 'TN SSLC & HSE Result' மொபைல் செயலி மற்றும் DigiLocker தளம் மூலமாகவும் தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம்.
சுமார் 9 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வருகிறது.
தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வைத்து பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம்.
பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், சட்டம், துணை மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளை படிக்க 11 ஆம் வகுப்பில் எடுக்கும் குரூப் முக்கியமானது. பொறியியல் படிப்புக்கு கணிதம் கட்டாயம் வேண்டும். மருத்துவம் படிப்பிற்கு தாவரவியல், விலங்கியல் படிப்புகள் அவசியம். இந்த குரூப்கள் கிடைக்க வேண்டும் என்றால் 10 ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டியது அவசிமாகும்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வு முடிந்து 2ஆம் கட்ட தேர்வுகள் நடக்க உள்ளன. இதனால் மதிப்பெண்களை கூட்டிக் கொள்ள உதவும். ஆனால் தமிழகத்தில் நடக்கும் 10ஆம் வகுப்பு தேர்வுக்கு அதுபோல் இரண்டாம் கட்ட தேர்வு என்பது இல்லை.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications