Tamil Nadu 10th and 12th Exam Schedule: தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு - முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பாட வாரியாக எந்த தேதிகளில் எந்தெந்த தேர்வுகள் நடைபெறுகிறது என்ற முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவ- மாணவிகள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் விதமாக தேர்வு அட்டவணை சீக்கிரமாகவே வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025-26 கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பின் விவரங்களையும் பாடவாரியாக எந்தெந்த தேர்வு எப்போது என்ற விவரமும் வருமாறு:-

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை:
03.03.2026- செவ்வாய்க்கிழமை
* தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
06.03.2026- வெள்ளிக்கிழமை
* பகுதி-II ஆங்கிலம்
10.03.2026-செவ்வாய்க்கிழமை
* பகுதி-III - வேதியியல், கணக்குப்பதிவு, புவியியல்
12.03.2026-வியாழக்கிழமை
* பகுதி-III - தொடர்பாடல் ஆங்கிலம், நெறிமுறை மற்றும் இந்திய பண்பாடு, கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர்வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), இல்லவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியத் துறை (தொழில்வாரி), அடிப்படை மின்சாரப் பொறியியல்
18.03.2026-புதன்கிழமை
* பகுதி-III - இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன்கள்
24.03.2026-செவ்வாய்க்கிழமை
* பகுதி-III - கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, துணி மற்றும் உடை வடிவமைப்பு, உணவுப் பரிமாற்ற மேலாண்மை, வேளாண்மை அறிவியல், செவிலியத் துறை (பொது)
27.03.2026-வெள்ளிக்கிழமை
* பகுதி-III - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை வாகனப் பொறியியல், அடிப்படை இயந்திரப் பொறியியல், துணி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலாளர் பணிகள்
தேர்வு முடிவு எப்போது?
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 08.05.2025
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை:
11.03.2026 - புதன்கிழமை
* பகுதி-I - தமிழ் மற்றும் பிற மொழிப்பாடங்கள்
16.03.2026 - திங்கள்கிழமை
* பகுதி-II - ஆங்கிலம்
25.03.2026 - புதன்கிழமை
* பகுதி-III - கணிதம்
30.03.2026 - திங்கள்கிழமை
* பகுதி-III - அறிவியல்
02.04.2026 - வியாழக்கிழமை
* பகுதி-III - சமூக அறிவியல்
06.04.2026 - திங்கள்கிழமை
* பகுதி-IV - விருப்ப மொழிப்பாடம்
தேர்வு முடிவு எப்போது?
தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள்; 20.05.205 (தோராயமானது)
தேர்வு தொடங்கும் நேரம்:
* காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல்; 1.15 மணிக்கு முடியும்.
* காலை 10.00 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை வாசிக்கும் நேரம்
* காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை தேர்வரால் விவரங்கள் சரிபார்க்கும் நேரம்
* காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வுக்கான கால அளவு. என்று கூறப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications