மாநிலங்களுக்கு 50% வரிப்பகிர்வு.. கல்வி நிதியும் உடனே வழங்குக.. நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
டெல்லி: ஒருதலைபட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல் தாமதமின்றி கல்வி நிதியை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறார். மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவிகிதத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், உறுதி அளித்த 41% நிதி பகிர்வு அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம்
நடப்பு ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இம்முறை அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி பறந்தார். இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.

நிதிப் பகிர்வு
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில், மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவிகிதம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். தற்போது மாநிலங்களுக்கு 33.16% மட்டுமே மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வாக அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட 41 சதவிகித நிதிப்பகிர்வு வழங்கப்படுவதில்லை.
மத்திய அரசு திட்டங்கள்
15வது நிதிக்குழு பரிந்துரையின்படி மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கு 41 சதவிதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு உறுதி அளித்தபடி நிதிப்பகிர்வு வழங்கப்படாததால் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கும் மாநில அரசு அதிக நிதியை செலவிட வேண்டிய தேவை உள்ளது. இது மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
கல்வி நிதி
அதேபோல் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாததால் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி மறுக்கப்பட்டுள்ளது. 2025-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,200 கோடி நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஒருதலைபட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல், எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தாமதமின்றி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்.
ஆறுகளை தூய்மைப்படுத்தும் திட்டம்
அதேபோல் நகர்ப்புற மேம்பாட்டுக்கு பெருமளவிலான நிதியை கொண்டு வரும் திட்டத்தை உருவாக்குவது அவசியம். சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாக கொண்ட புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை போல் தமிழ்நாட்டில் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி ஆறுகளை தூய்மைப்படுத்தும் திட்டம் தேவை. இந்த திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications