மத்தியில் பாஜகவின் கொடிய, சர்வாதிகார ஆட்சி- மும்பை "இந்தியா" கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு- ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியில் ஆளும் பாஜகவின் கொடிய, சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டி இந்தியாவை பாதுகாப்போம்; மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி கட்சிக் கூட்டத்தில் முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் நாகை செல்வராஜ் எம்பி இல்லத் திருமண விழாவில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் - தி.மு.க.விற்கும் எப்பொழுதும் நட்பு உண்டு, அன்பு உண்டு. கலைஞர்தான் அடிக்கடி சொல்வார், பெருமையோடு சொல்வார். தந்தை பெரியாரை நான் பார்த்திருக்காவிட்டால், அறிஞர் அண்ணாவை நான் சந்தித்திருக்காவிட்டால், நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்திருப்பேன் என்று பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

Tamil Nadu CM MK Stalin lashes out PM Modi lead Union BJP Govt

கம்யூனிஸ்ட்- திமுக கூட்டணி தொடரும்: எனவே அந்த உணர்வோடு நம்முடைய நட்பு, தேர்தலுக்காக நட்பு மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் நட்பு மட்டுமல்ல, கொள்கை நட்பு. அதுதான் முக்கியம். எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறபோதும் தொடர்கிறது. தொடர்கிறது என்றால், இது என்றைக்கும் தொடரும். உறுதியாக சொல்கிறேன், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாகத் தொடரும் என்பதை இந்த திருமண விழா பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

லோக்சபா தேர்தல் 2024: ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திக்க இருக்கிறோம் என்று சொன்னால், ஏதோ ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தலாக மட்டும் நாம் நினைத்து விடக்கூடாது. அதையும் தாண்டி சொல்கிறேன், ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறும் தேர்தலாகக் கூட நீங்கள் நினைத்து விடக்கூடாது. இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இன்றைக்கு சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் - ஒரு பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் - பி.ஜே.பி. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம். இந்தியாவைக் காப்பாற்றும் நிலைக்கு நாம் இப்போது வந்திருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் 'இந்தியா' கூட்டணி அமைந்திருக்கிறது.

மும்பையில் முக்கிய முடிவுகள்: பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் தலைமையில் கூடி எதிர்க்கட்சியில் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி உருவாக முதல் கூட்டத்தை பீகார் மாநிலத்தில் நடத்தினோம். அதற்கு அடுத்து கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம். அதில்தான் இந்தியா என்ற பெயரைத் தேர்வு செய்து நம் கூட்டணிக்கு பெயர் அறிவித்தோம். அடுத்த வருகின்ற ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவுகளை எல்லாம் நாம் அறிவிக்க இருக்கிறோம். நானும் அந்தக் கூட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். எனவே தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எல்லாம் எவ்வாறு காரணமாக இருந்தீர்களோ அதே போல் ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக ஒன்றிய அரசு அமைவதற்கு அது நல்லரசாக அமைவதற்கு நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும்.

Tamil Nadu CM MK Stalin lashes out PM Modi lead Union BJP Govt

தேர்தல் பிரசாரம் தொடக்கம்: தேர்தல் பிரச்சாரத்தை இங்கே தொடங்கி வைக்க வேண்டும் என்று நம்முடைய முத்தரசன் குறிப்பிட்டார்கள். தொடங்கத்தான் வந்திருக்கிறேன், நான் எப்போதுமே தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில்தான் தொடங்குவேன். இப்போதும் அதே உணர்வோடுதான் இந்த மேடையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

என்ன செய்தது பாஜக அரசு?: ஒன்பது வருடமாக பி.ஜே.பி.யின் ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஒன்பது வருடமாக நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை செய்திருக்கிறோம், இந்தத் திட்டங்களை அறிவித்திருக்கிறோம், நிறைவேற்றி இருக்கிறோம், சாதனைகளைப் படைத்திருக்கிறோம், மக்களுக்கு எல்லாம் இப்படி நன்மைகளை செய்திருக்கிறோம் என்று ஏதாவது அவர்களால் சொல்ல முடிகிறதா? எதுவும் சொல்ல முடியவில்லை.

ரூ15 கொடுத்தார்களா?: தேர்தலுக்கு முன்னால் என்ன சொன்னார்கள், வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் கைப்பற்றி அதை இந்தியாவிற்குக் கொண்டு வந்து நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்போகிறேன் என்று அறிவித்தார். நான் பல கூட்டங்களில் கேட்டேன். நான் மட்டுமல்ல, எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரமாவது தந்தார்களா? 15 ஆயிரம் வேண்டாம், 15 ரூபாயாவது தந்தார்களா? இதுவரையில் இல்லை. நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு ஆண்டிற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்று உறுதிமொழி தந்தார்கள். எங்காவது ஒன்றிய அரசின் மூலமாக வேலை வழங்கப்பட்டு இருக்கிறதா? இல்லை. வேலைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த ஆட்சியின் நிலை. இதைப்பற்றி நாம் ஒரு பக்கத்தில் பேசுகிறோம்.

"இந்தியா" கூட்டணி ஏன்?: இதைவிட கொடுமை. மதத்தை வைத்து ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி, நாட்டை இரண்டாக்கும் சூழ்நிலையில் ஒரு கொடிய ஆட்சி இன்றைக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் கலந்து பேசி இதற்கான முடிவெடுக்க வேண்டும், இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும், தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா என்ற தலைமையில் ஒரு கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம்.

"இந்தியா" கூட்டணியில் திமுக: இதைப் பிரதமர் மோடியால் தாங்க முடியவில்லை. அதிலும் தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் எப்படி நாடாளுமன்றத் தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் - ஒரு கூட்டணி அமைத்து ஸ்ட்ராங்காக அந்தக் கூட்டணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறோமோ, அந்தக் கூட்டணி தொடர்ந்து தமிழ்நாட்டில் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். எனவே அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் இந்தக் கூட்டணியும் அந்த இந்தியா கூட்டணியில் சேர்ந்திருக்கிறது.

திமுக மீது விமர்சனம்: இந்தியா என்ற கூட்டணி உருவாகுவதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்தக் கூட்டணி காரணமாக இருக்கிறது என்ற ஒரு ஆத்திரம் இன்றைக்கு பிரதமராக இருக்கும் மோடிக்கு வந்துவிட்டது. அதனால்தான் எங்கு சென்றாலும், அது சுதந்திர தின நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கொடியேற்று விழா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது பல மாநிலங்களுக்குச் சென்று அங்கு நடத்தும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி - எங்கு சென்றாலும் இன்றைக்கு நாம் அமைத்திருக்கும் கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார், கொச்சைப்படுத்தி பேசுகிறார். அதிலும் தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய அணியைப் பற்றி, குறிப்பாக தி.மு.க.வை பற்றி இன்றைக்கு அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்குக் கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.

சிஏஜி அம்பலப்படுத்திய ஊழல்: என்ன பேசுகிறார்? தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாம். ஒன்பது வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். "எனவே அந்த ஊழலை ஒழித்தே தீருவேன். இந்தியாவில் இருக்கும் ஊழலைத் ஒழித்தே தீருவேன்" என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நான் பிரதமர் மோடி அவர்களை பார்த்து அடக்கத்தோடு கேட்க விரும்புவது, ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டா? உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்போது சி.ஏ.ஜி. ஆதாரங்களோடு எடுத்து வெளியிடுகிறார்களே, எல்லாவற்றையும் குறித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். ஏனென்றால் புள்ளி விவரம் இது. தவறாகப் பேசி விடக்கூடாது. எதையும் ஆதாரத்தோடுதான் பேச வேண்டும். அதற்காக நான் புள்ளி விவரத்தை எல்லாம் குறித்து கையில் எடுத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+