ஸ்டாலினின் அந்த சொல்.. டக்கென பார்த்த பாஜக.. விக்கிரவாண்டி திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்ட முதல்வர்
சென்னை: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சார வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலமாக, சமூக நீதிக்கு துரோகம் இழைக்கிற தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதல்வர் அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

போட்டி: இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
ஒவ்வொரு கட்சியினரும் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர்.. திமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக பிரச்சாரம் செய்துள்ளார்.
வீடியோ: அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வரும் ஜூலை 10ம் நாள், நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆற்றல் மிக்க அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் என்கிற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் உறுப்பினர்தான் அன்னியூர் சிவா.
பிரச்சாரம்: 1986 முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்துட்டு இருக்கேன்.. தடம் மாறாத, நிறம் மாறாத கலைஞரின் உடன்பிறப்புகளில் அவரும் ஒருவர்.. தலைவர் கலைஞர் பாணியில் சொல்ல வேண்டுமானால்,தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கிற ரத்த நாளங்களில் ஒருத்தர்.. அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் திமுக கொண்டுவந்துள்ள சாதனை திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர், விழுப்புரத்தில் கொண்டுவரப்போகும் திட்டங்களையும் அந்த பிரச்சார வீடியோவில் விரிவாகவே எடுத்துரைத்துள்ளார். முதல்வரின் இந்த பிரச்சார வீடியோவை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications