திருவள்ளுவரை யாரும் கறைபடுத்த முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
சென்னை: "குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறை படுத்த முடியாது" என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பெயரை குறிப்பிடாமல் பதிலடி தந்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. அப்பதிவில், திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

மேலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட படத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்திருந்தார். அத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் காவி உடையுடன் உள்ள திருவள்ளுவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் படத்துக்கு பாஜகவினர் காவி உடை அணிவித்தது ஏற்கனவே சர்ச்சையானது. ஆனால் தற்போது ஆளுநர் ரவியும் காவி உடையுடனான திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து, அப்படத்துக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். மேலும் திருவள்ளுவர் சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி எனவும் புகழ்ந்துள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) January 16, 2024
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை… pic.twitter.com/wUuvMJ4q63
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பெயரை குறிப்பிடாமல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் "வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது" என தமது திருவள்ளுவர் நாள் வாழ்த்து செய்தியில் சாடியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ள திருவள்ளுவர் நாள் செய்தி: தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், திருவள்ளுவர் தினத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024
Governor Thiru R. N. Ravi and Lady Governor Tmt Laxmi Ravi paid floral tributes… pic.twitter.com/Qb3LUJ4dIQ
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.
#திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து,… pic.twitter.com/EzYTtXvxwM
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024
133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.
குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி! இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது திருவள்ளுவர் நாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications