சினிமா விழாவில் முதல்முறையாக ஸ்டாலின்! பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ் நிகழ்வில் பங்கேற்க முடிவு!
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்க கூடிய முதல்வர் ஸ்டாலின், சோழர்கள் பற்றிய வரலாற்றுப் படம் என்பதால் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதல்வருடன் ஒரே மேடையில் அமரவுள்ளனர்.

பொன்னியன் செல்வன்
சோழப் பேரரரசர்கள் பற்றிய வரலாற்றை திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தினரே இந்த திரைப்படத்தில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவே பிரம்மாண்டமாக இருந்தது. அதைவிட கூடுதல் பிரம்மாண்டத்துடன் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ள படத் தயாரிப்பு நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக செய்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைத்து பொன்னியன் செல்வன் ஆடியோ வெளியிடப்படவுள்ளது. பொதுவாக இது போன்ற சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகள் பக்கம் தலைக்காட்டாத முதல்வர் ஸ்டாலின் சோழர்கள் பற்றிய படம் என்பதால் மறுப்பு ஏதும் கூறாமல் பொன்னியன் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்திருக்கிறாராம். தமிழகத்தில் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவது போல் ஹைதராபாத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி பொன்னியன் செல்வன் பாடல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

தயாரிப்பு நிறுவனம்
அங்கு நடைபெறும் விழாவில் இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளனர். இதனிடையே கர்நாடகாவில் நடைபெறும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பிரம்மாண்டத்தை காட்டியதை போல் ஆடியோ ரிலீஸ் விழாவிலும் பிரம்மாண்டத்தை காட்டும் திட்டத்தில் இருக்கிறது பட தயாரிப்பு நிறுவனம்.

முதல்முறையாக
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ள முதல் சினிமா விழா பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவாகும். இதனிடையே இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள், படத்தயாரிப்பு நிறுவனத்தின் அழைப்பை ஏற்று சமூக பொறுப்பு சார்ந்த ஒன்றிரண்டு திரைப்படங்கள் மட்டும் அவர் சிறப்புக் காட்சி மூலம் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications