Independence day: ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்து! புறக்கணிக்கும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அது போல் கூட்டணி கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.
இன்று 79 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் தமிழக ஆளுநர் மாளிகையான கிண்டி ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த தேநீர் விருந்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்கும். இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி தேநீர் விருந்துக்காக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றன. ஆனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்டவை ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதை எதிர்த்து, சுதந்திர நாளை ஒட்டி அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய நாள்களில் நடைபெறும் இரண்டு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் முதல்வர் ஸ்டாலினின் அறிவுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா முறையாக தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார். அதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்ற பின்பு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்றார். அந்தத் தடையாணையினை நீக்கிட உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில், ஆளுநர் மேற்படி பா.ஜ.க. பிரமுகர் தெரிவித்த கருத்துகளை ஆதரிக்கும் வகையில் முந்திக்கொண்டு போய் வாதுரை தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் இது ஒரு உதாரணமாக விளங்குகிறது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளுநரின் செயல்பாடுகளும், அவர் போட்டுவரும் முட்டுக்கட்டைகளும்தான் காரணம்.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆக. 15 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார். மேலும், முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி தானும் ஆக. 18 மற்றும் ஆக. 19 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications