Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்மலா சீதாராமனுக்கு பக்தி இல்லை.. பகல் வேஷம் போடுகிறார்.. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு உள்ளபடியே பக்தி என ஒன்று இருந்தால், கோயில்கள் பாதுகாப்பில் அரசின் நடவடிக்கைகளுக்காக அவர் திமுகவை பாராட்ட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நமது பாரம்பரியத்தை எடுத்து சொல்வதற்கான வாய்ப்பு இல்லை. சில சமயம் அதில் அரசியல் நுழைந்து, சர்ச்சைகள் உருவாகிறது. கோயில் சொத்துக்களை திருடி வெளிநாடுகளுக்கு விற்கின்றனர்.

Tamil Nadu CM Stalin attacks Central Finanace Minister Nirmala Sitharaman

கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை. நமது கோயில் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. வெளிநாடு அருங்காட்சியகத்தில் இருக்கும் கோயில் சொத்துக்களை நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம் என்று கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார் நிர்மலா சீதாராமன்.

இதற்கு பதிலடி கொடுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட குற்றசாட்டை கூறுவது கண்டிக்கத்தக்கது. இறை சொத்தை களவாடக் கூடிய ஆட்சி இது இல்லை. பாதுகாக்க கூடிய ஆட்சியாகத்தான் உள்ளது. இந்த ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று பிம்பத்தை உருவாக்க நினைத்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்து சமயத்தை தனது இரு கரங்களால் முதலமைச்சர் அரவணைத்து செல்கிறார்.

இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வராது என்ற காரணத்தால் இது போல் குற்றசாட்டை வைக்கின்றனர் என்றும் சேகர்பாபு கூறினார். கோயில் சொத்துகள் கொள்ளை என திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்த நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் 2 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.

திமுக அரசு கோயில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி இருக்கிறார்; அண்ணாமலை போன்றோர் இந்த கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன்; இதுவரை ரூ.5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக மாடல் ஆட்சியில் தான் மீட்கப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு உள்ளபடியே பக்தி என ஒன்று இருந்தால், கோயில்கள் பாதுகாப்பில் அரசின் நடவடிக்கைகளுக்காக அவர் திமுகவை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு பக்தி இல்லை. நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.

உயர் பொறுப்பில் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் டி.ஜி.பி.யும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆன நட்ராஜ் சமீபத்தில் வாட்ஸ்அப் குழுக்களில் முதலமைச்சர் மற்றும் அரசு குறித்து போலி செய்திகளை பரப்பியது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது அதனை குறிப்பிட்டும் முதல்வர் ஸ்டாலின் திருமண விழாவில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+