கிளம்பி வாங்க.. மொத்த அமைச்சரவைக்கும் உத்தரவிட்ட ஸ்டாலின்.. குறிக்கப்பட்ட நாள்.. அமைச்சரவை கூடுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 13ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. முன்னதாக தமிழக அமைச்சரவையின் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதிதான் நடந்தது. அதன்பின் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மீண்டும் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் அடுத்த வாரம் மீண்டும் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணத்திற்கு முன்னதாக பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

Udayanidhi Stalin DMK M K Stalin

வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.

அமைச்சரவை மாற்றம்: இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து துறை, மின்சார, அமலாக்கத்துறை ஆகியவை மாற்றம், உள்ளாட்சி துறை மாற்றம், விளையாட்டு துறை மாற்றம்.. ஆகிய துறைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது .

உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சி கட்சியாக இருக்கிறது. வலிமையான கூட்டணி வைத்துள்ளனர்.

ஆனால் ஆட்சி மீது சில விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்களை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றப்படும். 5-6 அமைச்சர்கள் மீது புகார் சென்றுள்ளது. அவர்கள் மாற்றப்படலாம். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.

உதயநிதியை துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். விரைவில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை மாற்றம் + உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி உட்பட அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஸ்டாலின் வெளிநாடு செல்வதை முன்னிட்டு ஆட்சி நிர்வாக பொறுப்புகள் அவருக்கு முழுமையாக வழங்கப்படலாம் என்கிறார்கள்.

அதை மனதில் வைத்தே சமீபத்தில் செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+