"மிக சிறந்த இறுதி போட்டி.. கடைசி வரை போராடிய பிரான்ஸ்.." அர்ஜென்டினாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணிக்கு உலகெங்கும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். அதன்படி முதல்வர் ஸ்டாலினும் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியைப் பாராட்டியுள்ளார்.
கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. மொத்தம் 32 நாடுகள் களமிறங்கிய இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

இந்திய நேரப்படி நேற்றிரவு நடந்த இறுதிப் போட்டியில் முதல் பாதியில் அர்ஜெண்டினா இரு கோல்களை அடித்தது. இருப்பினும், 80, 81ஆவது நிமிடங்களில் பிரான்ஸ் அடுத்தடுத்து கோல் அடித்து கம்பேக் கொடுத்தது.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்திருந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் மீண்டும் இரு அணிகளும் கோல் அடிக்க போட்டி மீண்டும் சமனில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியாளரைத் தேர்வு செய்ய பென்லாடி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா உலகக்கோப்பை வென்றது. அர்ஜென்டினா வெற்றியை அந்நாட்டு ரசிகர்களும் மெஸ்ஸி ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
அதேபோல உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணிக்கு உலகெங்கும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். அதன்படி முதல்வர் ஸ்டாலினும் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியைப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்ன ஒரு அற்புதமான சுவாரஸ்யமான போட்டி! கடைசி வரை வீழ்ந்துவிடக் கூடாது என்று நினைத்த பிரான்ஸ்... எம்பாப்பேவின் அசத்தல் ஹாட்ரிக் இந்தப் போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றிவிட்டது.
கால்பந்து உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸிக்கு வாழ்த்துகள்.. மார்டினெஸை நிச்சயம் தனியாகப் பாராட்டியே தீர வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications