ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. முதலீட்டாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஸ்பெயின் நாட்டிற்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய முதலீடுகளை மாநிலத்தில் வரும் போது வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

Tamil Nadu CM Stalin departs to Spain to attract foreign investment

ஏற்கனவே இந்தியாவில் அதிகம் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கும் போதிலும், பல கூடுதல் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிநாட்டு முதலீடுகள்: அதன் ஒரு பகுதியாகவே இம்மாத தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பல லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

பொதுவாக சென்னை மற்றும் அதைச் சுற்றி இருக்கும் மாவட்டங்களில் ம்டடுமே முதலீடுகள் இருக்கும். ஆனால், இந்த முறை அப்படி இல்லாமல் மாநிலம் முழுக்க, அதிலும் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இந்த முதலீட்டாளர் மாநாடு மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அடுத்தகட்ட நடவடிக்கையாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் இப்போது ஸ்பெயின் நாட்டிற்குச் செல்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்: ஸ்பெயின் செல்ல சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "அன்மையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெற்றது.. தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதே ஒரே இலக்கு. கடந்த இரு பயணங்கள் மூலம் சுமார் 7749 முதலீடுகளை வந்துள்ளன.

என்ன சொன்னார்: முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன்.. பிப். 7ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறேன்.. ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உள்ளேன்.. ஸ்பெயின் நாட்டின் தொழில்முனைவோர் இதில் கலந்து கொள்கின்றனர்.. இந்தியாவில் முதலீடு செய்யச் சிறந்த மாநிலம் தமிழகம் என்பதை எடுத்துரைக்க உள்ளேன்.. இந்த பயணம் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புகிறேன். எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்பதை அங்குச் சென்று வந்த பிறகு எடுத்துரைக்கிறேன்" என்றார்.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், அவரை வழியனுப்பி வைக்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் என்று பலரும் ஏர்போர்ட்டிற்கு வருகை தந்தனர். இன்று இரவு 9.45 மணிக்குச் சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து சுவீடனுக்குச் செல்கிறார். பிறகு அங்கிருந்து ஸ்பெயினுக்கு பயணம் செய்கிறார்.

அங்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர். இந்த பயணத்தில் ஸ்பெயின் நாட்டில் இருந்து முதலீடுகள் தொடர்பாகப் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+