ஸ்டாலினே சொல்லிட்டாரே.. இன்று பட்ஜெட்டில் வரும் மேஜர் அறிவிப்பு? அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இன்று பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமான வாக்குறுதி ஒன்று நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
பல்வேறு திட்டங்கள்: இன்னொரு பக்கம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதே சமயம் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக பெட்ரோல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை
சமீபத்தில் கர்நாடகாவில் நிறைவேற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடகாவில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அம்மாநில தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் முதலமைச்சர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.
பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கடந்த 2022 வருடம் பேசுகையில், தனிநபர் ஒருவருக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர் ஒருவருக்கு ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது"என்று தெரிவித்தார்.
அவரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது.
தங்கம் தென்னரசு: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தாக்கல்ஸ் உள்ள முதல் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் உறுதி: இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என இன்று உறுதியளித்தார் என்று ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார். அமைச்சர் பிடிஆர் போல பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என்று மறுக்காமல் தங்கம் தென்னரசு அளித்த பதிலால், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக திட்டம்: இன்னொரு பக்கம் புதிய பென்சன் திட்டத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அல்லது புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.
இப்போது உள்ள மார்க்கெட் லிங்க் பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய முறையை கொண்டு வர உள்ளனர். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான் இந்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications