ஜிம்மில் மாஸ் காட்டிய ஸ்டாலின்! அமெரிக்காவுக்கு போன பிறகும் தவறாமல் ஒர்க் அவுட்! டிரெண்டாகும் போட்டோ
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். உடலை ஃபிட்டாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்வதை முதல்வர் ஸ்டாலின் வாடிக்கையாக வைத்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் ஜிம் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் செய்துள்ளார். இது தொடர்பான போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-களையும் நேரில் சந்திக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்: இதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்டார். சான் பிரான்சிஸ்கோவில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கனவே முதல்வரின் பயணத் திட்டத்தைக் கவனிக்க அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அவர் விமான நிலையத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார். மேலும், முன்னாள் திமுக மத்திய அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்ட பலரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வரவேற்றனர்.
அமெரிக்காவில் ஒர்க் அவுட்: இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள ஜிம் ஒன்றில் ஒர்க் அவுட் செய்யும் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். உடலை ஃபிட்டாக வைத்திருக்க முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழகத்தில் இருக்கும் போதும் தொடர்ச்சியாக ஜிம் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். மேலும், அவ்வப்போது சைக்கிளிங் செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். இதற்கிடையே அமெரிக்காவில் ஜிம் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் செய்துள்ளார். இது தொடர்பான போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இப்போது சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் நிலையில், உள்ளூர் நேரப்படி சுமார் 8.30 மணியளவில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்துள்ளார். இது தொடர்பான போட்டோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முதல்வரின் அமெரிக்கப் பயணம்: முதல்வர் ஸ்டாலின் இப்போது அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் இருக்கும் நிலையில், வரும் செப்டம்பர் 2ம் தேதி வரை அவர் அங்கேயே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். குறிப்பாக சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அப்போது அங்குள்ள முதலீட்டாளர்களுக்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும்படி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார்.
ஆக. 31ம் தேதி புலம்பெயர்ந்த தமிழக மக்களைச் சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் கலந்துரையாடுகிறார். செப். 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், செப். 11ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். குறிப்பாக அங்கு பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள டாப் நிறுவனங்களின் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். அதைத் தொடர்ந்து செப். 7ம் தேதி 'வணக்கம் அமெரிக்கா' என்ற பெயரிலான அயலக தமிழர்கள் உடனான நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
சுமார் 17 நாட்கள் வரை முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து செப். 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications