79 ஆவது சுதந்திர தின விழா! சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். முன்னதாக காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வெளி ஜீப்பில் ஏறிச் சென்று ஏற்றுக் கொண்டார்.
79 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி அரசு கட்டடங்கள் மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஜொலிக்கிறது. ரிப்பன் மாளிகை, தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு கட்டடங்கள் மூவர்ணத்தில் ஜொலித்தன.

முதல்வர் ஸ்டாலின் தனது சுதந்திர தின விழா வாழ்த்துச் செய்தியில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். 79 ஆவது சுதந்திர தின விழாவில் ஜனநாயகம் நிறைய தேசத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதியேற்போம்.
மதவெறி, பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களை பாதுகாப்பதுதான் உண்மையான சுதந்திரம் ஆகும்" என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இன்று புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றினார். அத்துடன் அவர் காவலர் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். திறந்த ஜீப்பில் வந்து படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அப்போது தமிழக அரசின் விடியல் பயணம், தாயுமானவர் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 9 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications