தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்
சென்னை: தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கார்பன் டேட்டிங் ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இரும்பு காலத்தின் கார்பன் டேட்டிங் ஆதாரங்களை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது சிந்து நாகரீகத்தைவிட நம்முடைய நாகரீகம் மூத்தது என்று காட்டும் விதங்களில் உள்ள இரும்பு காலத்தின் கார்பன் டேட்டிங் ஆதாரங்களை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

'இரும்பின் தொன்மை' எனும் நூலை இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். கீழடி இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விலேயே முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்..
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்துள்ள போஸ்டில், இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருக.
கீழடி ஆய்வு:
உலகின் மூத்த முன்னோடி நாகரீகம் தமிழ்தான் என்பதற்கு சான்றாக கீழடி வளர்ந்து நிற்கிறது. அங்கு தோண்ட தோண்ட புதிய கண்டுபிடிப்புகள், வரலாற்று சான்றுகள் இதை உறுதிப்படுத்துகிறது. மிக சிறப்பான நாகரீகம் அமைத்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல முன்னேறி நாடுகளின் நாகரீகத்தையே விட தமிழர்களின் நாகரீகம் பல மடங்கு முன்னேறி இருந்தது கீழடி ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள், தாழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் ஆகும். கீழடி, இந்த பெயர் தமிழக வரலாற்றை பல அடி உயரங்களுக்கு மேலே கொண்டே செல்ல போகிறது. கீழடியில் இதுவரை கிடைத்த தொல்பொருட்கள் எல்லாம் உலகிலேயே மிகவும் பழமையான தொல்பொருள்களில் ஒன்று.
இந்த தொல்பொருட்களை சரியாக ஆராய்ச்சி செய்தாலே பல இனங்களில் வரலாற்றை மாற்றி எழுதி முடியும். இந்த கீழடி ஆராய்ச்சி தொடங்கியது என்னவோ 2015ல் தான். ஆனால் தொடக்கத்தில் இருந்தே இதில் பல ஆச்சர்யங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்தது. இந்தியாவில் எங்குமே கிடைக்காத அரியவகை பொருட்கள் இங்கு கிடைத்தது. குறைந்தபட்சம், இந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்ட காலம் கிமு 2ம் நூற்றாண்டாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இதுவரை 6000க்கும் அதிகமான தொல்லியியல் சார்ந்த பொருட்கள் கிடைத்து இருக்கிறது. பாரசீக பாசி குறியீடு ஓடுகள் நிறைய கிடைத்து இருக்கிறது. நேர்த்தியான முறையில் கட்டமைக்கப்பட்ட கழிவுநீர்கால்வாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்கூடங்கள் செயல்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.
அதேபோல் அங்கு வீடுகள் இருந்ததற்கான அடையாளமும் இருந்துள்ளது. அதேபோல் இங்கு பல கோடி மதிப்பில் தங்கங்களும் காணப்பட்டு இருக்கிறது. 16 மீட்டர் தோண்டிய பின் இந்த தங்கம் கிடைத்துள்ளது. 50க்கும் அதிகமான சிறு சிறு ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கே கண்டுபிடிக்கப்பட்டு இரும்புகளில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் முடிவுகளையே முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications