Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

17 நாள் அமெரிக்க பயணம் முடிந்தது.. சென்னை வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 17 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் சென்னை வந்து இறங்கினார். 17 நாளில் 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் சென்னை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர்.

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த மாதம் 27 ம் தேதி சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

mk stalin america investments

மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதுதவிர பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

அதேபோல் ஜாபில் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.666 கோடி முதலீட்டில் 365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை சுமார் 5,000 கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அமெரிக்க பயணத்தில் மொத்தமாக தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினின் 17 நாள் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து நேற்று அங்கிருந்து புறப்பட்டார். சிகாகோ விமான நிலையத்தில் இருந்து இன்று துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார். சிகாகோ விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் திரண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ 'Goodbye, USA!' என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் வந்து இறங்கினார். அவரை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். மேள, தாளம் முழங்க முதல்வர் ஸ்டாலினுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு சென்னை விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணம் பற்றியும், அமெரிக்காவில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள் பற்றிய விபரங்களை பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தெரிவிக்க உள்ளார். அதன்பிறகு விமான நிலையத்தில் இருந்து முதல்வர் இல்லம் வரை வழிநெடுகிலும் திமுகவினர் திரண்டு நின்று ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+