இனி பறக்கலாம்.. வாகன நெரிசலுக்கு குட்பை! ஓஎம்ஆர் சாலை ‛யு’ டர்ன் மேம்பாலத்தை திறந்துவைத்த ஸ்டாலின்
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் இந்திரா காந்தி சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள யு-டர்ன் மேம்பாலத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதன்மூலம் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் ஈஸியாக வாகனங்களில் செல்ல முடியும்.
சென்னையில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் என்பது பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது.
குறிப்பாக பீக் ஹவர்ஸ்களில் சாலை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. இந்நிலையில் தான் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மக்கள் விரைந்து வாகனங்களில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை ராஜிவ் காந்தி சாலையில் வாகன நெரிசலால் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு, இந்திரா காந்தி சிக்னல் சந்திப்பு உள்ளிட்டவற்றை கடந்த பீக் ஹவர்ஸ்களில் 30 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை ஆனது. இதனால் மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்தனர். இதையடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி
அதன்படி சென்னை ஓஎம்ஆர் சாலையில் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகேயும், டைடல் பார்க் சந்திப்பின் அருகேயும் 2 யு-டர்ன் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பாலங்கள் உள்பட மொத்தம் 4 பாலங்கள் ரூ.108 கோடி மதிப்பீட்டில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதில் முதல் யு-டர்ன் மேம்பால பணிகள் ஓஎம்ஆர் சாலையில் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. ரூ.18.15 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் தறை சார்பில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் 237 மீட்டர் நீளத்துடன், 12.5 மீட்டர் நீளமுற்ற 19 கண்களை கொண்டதாகும். ராஜிவ் காந்தி சாலையின் வலதுபுறத்தில் இந்த பாலத்தின் ஏறு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும், இடதுபுறத்தில் இறங்கு சாய்தளம் 120 மீட்டர் நீளத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்திராநகர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சிக்னல்களில் வாகனங்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பணி தற்போது முழுவதுமாக முடிவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் இந்த யு-டர்ன் மேம்பாலத்தை இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன்மூலம் சோிங்கநல்லூர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் இந்திரா நகர் மேம்பாலம் வழியாக ஏறி U திருப்பம் எடுத்து இந்திரரா நகர் வழியாக அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி விரைந்து செல்ல முடியும்.
மாறாக டைடல் பார்க் அருகே கட்டப்பட்டு வரும் 2வது யு-டர்ன் மேம்பாலம் என்பது டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது. இந்த பாலப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு அதுவும் திறக்கப்படும். இந்த பாலம் திறக்கப்பட்டால் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யு-டர்ன் எடுத்து வேகமாக செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications