அவசரமாக டெல்லி செல்லும் விஜய்.. கலெக்டர் பத்மஜா புகாரில் ஆக்சன் என்ன? நேரில் கேட்கும் அமித் ஷா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற் காக நாளை டெல்லிக்கு செல்கிறார் முதல்வர் விஜய். ஆனால், பிரதமர் மோடியை சந்திக்கச் செல்வதாக செய்தி பரபரப்பப்பட்டது. ஆனால், 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள அந்த நாட்டிற்கு செல்கிறார் என்று கடந்த ஒரு வாரமே பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், 16-ந்தேதி டெல்லிக்கு செல்லும் விஜய், மோடியை எப்படி சந்திக்க முடியும் ? பிரதமர் அலுவலகத்திலிருந்து விஜய்க்கு எந்த அப்பாயிண்ட்மெண்ட்டும் கொடுக்கப் பட வில்லை என்கிறது டெல்லி தகவல்கள்.

அதனால், கூட்டணி கட்சி என்கிற மரியாதையை தருவதற்காக சோனியா வின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார் விஜய். அதுவும் விஜய்யை தொடர்புகொண்டு ராகுல்காந்தி அழுத்தமாகப் பேசியதால் தான் டெல்லிக்கு வரச்சம்மதித்துள்ளார் விஜய். இல்லையெனில், சோனியாவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள பெரிய அளவில் விஜய் ஆர்வம் காட்டவில்லை. காரணம், சோனியா எபோதுமே திமுகவின் ஆதரவு நிலை எடுப்பவர்.

Tamil Nadu CM

சமீபத்தில் தனித்தனியாக தன்னை சந்தித்த திமுக கனிமொழி மற்றும் திமுக குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறன் ஆகியோரிடம், திமுக கூட்டணியை விட்டு காங்க்ரஸ் வெளியேறியதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. புதிய கூட்டணிக்குள் (தவெக) காங்கிரசை சேர்த்தும் கூட ஆரோக்கியமாகப்படவில்லை என சொல்லியிருக்கிறார். அந்த வகையில், திமுகவின் நலன் விரும்பியாக இருப்பவர் சோனியா. அதனால் சோனியாவின் சுயசரிதை நூல் விழாவில் கலந்துகொள்ள விஜய்க்கு ஆர்வம் இல்லை. ஆனால், இந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் என் அன்னையின் (சோனியா) பாசம் உங்களுக்கு கிடைக்கும் என்று ராகுல் வலியுறுத்தியதால் தான் சம்மதித்தார் விஜய் என்று சொல்கிறார்கள் தவெக மேல்மட்ட சோர்ஸ்கள்.

ஆலோசகர்களிடமும் உயரதிகாரிகளிடமும் விவாதித்திருக்கிறார் விஜய்

அதேசமயம், டெல்லி செல்வதை உறுதி செய்வதற்கு முன்பு ஆலோசகர்களிடமும் உயரதிகாரிகளிடமும் விவாதித்திருக்கிறார் விஜய். அப்போது, காங்கிரஸ் எடுக்கும் விழாவில் கலந்து கொள்ள டெல்லி செல்வதாக இருந்தால், மத்திய அமைச்சர்களை நீங்கள் சந்திக்க வேண்டும். சந்திக்காமல் திரும்பினால், டெல்லிக்கு சென்ற முதல்வர் தமிழகத்தின் நலன்களுக்காக பிரதமரை சந்தித்திருக்கலாம், மத்திய அமைச்சர்களை சந்தித்திருக்கலாம். ஏன் சதிக்கவில்லை? என்று அரசியல் ரீதியாக விமர்சனங் களை தமிழக எதிர்க்கட்சிகள் முன் வைக்கும். அந்த விமர்சனங்களுக்கு வலிமை அதிகமாக இருக்கும். அந்த விமர்சனங்களை நாம் புறக்கணித்து விட முடியாது.

அதனால், பிரதமரை நீங்கள் சந்தித்து தமிழகம் சார்ந்த கோரிக்கைகளை கொடுத்து விட்டு வருவதுதான் சரியாக இருக்கும். ஆனால், நீங்கள் டெல்லிக்கு செல்லும் போது மோடி டெல்லியில் இல்லை.வெளிநாடு செல்கிறார். அதனால் அமைச்சர்கள் அமீத்சா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்திப்பது ஆரோக்கியமாக இருக்கும் என்று அதிகாரிகளும் ஆலோசகர் களும் யோசனை சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முதல்வர் விஜய் ஒப்புக் கொண்ட நிலையில், அமீத்சாவின் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளது தமிழக அரசு. ஆனால், இப்போது வரை அப்பாயிண்ட்மெண்ட் உறுதி செய்யப் படவில்லை என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள் தரப்பினர்.

இதற்கிடையே, 13-ந்தேதி டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட தமிழக கவர்னர் அர்லேக்கர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த தமது ரிப்போர்ட்டை அமீத்சாவை சந்தித்து ஒப்படைத்துள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். கொடுத்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பற்றிய விவகாரம் உண்மை என கவர்னரும் அமித் சாவிடம் உறுதிப் படுத்தியுள்ளார். தவிர, சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது தவெக அரசு எந்த ஒரு சீரியஸ் ஆக்சனையும் எடுக்காததால் பத்மஜா, மத்திய உள்துறைக்கு புகார் தெரிவித்திருக்கிறார். இத்தகைய பின்னணிகளில் முதல்வர் விஜய்யின் கருத்தை அறிய அமித் சாவும் விரும்புவதாகவும், அதனால் விஜய்க்கு அமித் சா தரப்பில் அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பார் என்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+