அன்று கடல்நீர்! இன்று கழிவு நீர்! சென்னை கோயம்பேடு செல்லும் முதல்வர் விஜய்! என்னவா இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் விஜய் இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். அப்போது அவர் கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை மேம்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டில் 3ஆம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அப்போது சுத்தகரிப்பு நடைமுறைகள், சுத்திகரிக்கப்பட்ட நீரின் மறுபயன்பாடு உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிகிறார்.

Vijay koyambedu

நகர்ப்புற கட்டமைப்பு, நீர் மேலாண்மை திட்டப்பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளுடன் அண்மையில் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியிருந்தார்.

கோயம்பேட்டில் தினமும் பல மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இந்த ஆலை இயங்கி வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் நீர் தேவையை சமாளிக்க இந்த தொழில்நுட்பத்தை மேலும் விரிவாக்கம் செய்ய சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.

முதல்வராக பதவியேற்ற விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை ஆய்வு செய்தார். மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் இயங்கி வரும் நாளொன்றுக்கு 110, 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும் பேரூரில் ரூ 5814 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீரையும் அவர் குடித்து பார்த்தார். பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் இந்த திட்டம் அமலுக்கு வந்தால் தாம்பரம் மாநகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகே 20 ஊராட்சிகள் உள்ளிட்டவைகளில் உள்ள 22 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.

எனவே பேரூரில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீராக்கும் குடிநீராக்கும் திட்ட கட்டுமான பணிகளை தங்கு தடையின்றி அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+