தமிழக முதல்வர் விஜய்யின் முதல் வெளிநாட்டு பயணம்.. இன்று லண்டன் புறப்பட்டார்.. பயணத் திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன சென்றார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் முதல்வர் விஜய், லண்டனில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார். இன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய் துபாய் வழியாக லண்டன் செல்கிறார்.

விஜய்யுடன் உயர் மட்ட அதிகாரிகள் குழுவும் லண்டன் செல்கிறது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால், அவரை வரவேற்க லண்டனில் உள்ள தமிழ் சமூகத்தினரும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். வரும் 16 ஆம் தேதி வரை லண்டனில் சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர் விஜய், 17 ஆம் தேதி காலை 8 மணிக்கு துபாய் வழியாக சென்னை திரும்புகிறார்.

Vijay London industrial investment

பயணிகள் விமானத்தில் செல்கிறார்

முதல்வர் விஜய் இன்று லண்டன் புறப்படும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று இரவே லண்டன் புறப்பட்டு சென்றார். தமிழக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகளும் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவும் லண்டன் செல்கிறார். அரசு முறை வெளிநாட்டு பயணத்திற்கு தனி விமானத்தையே பயன்படுத்துவது வழக்கமாக உள்ள நிலையில், முதல்வர் விஜய் தனி விமானத்தை தவிர்த்து பயணிகள் விமானத்தில் செல்ல உள்ளார்.

அஜித்தை சந்திக்கிறார் விஜய்?

லண்டன் பயணத்தின் போது நடிகர் அஜித்தையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் வருகிற 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் Michelin Le Mans கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் அணி போட்டியிடுகிறது. இதனால் விஜய் லண்டனில் இருக்கும்போது அஜித்தை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் பார்க்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

திரைத்துறையில், விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்தாலும், இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நட்பு இருந்து வருகிறது. இந்த நிலையில்தான், அஜித்தை லண்டனில் முதல்வர் விஜய் சந்திக்க இருப்பதாக வெளியாகும் தகவல் இருவரின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொருளாதாரத்தை 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்ற வேண்டும் என்பதை இலக்காக தவெக அரசு அறிவித்துள்ள நிலையில், முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

தமிழ் மக்களுடன் சந்திப்பு

கடந்த மாதம் 13 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில், 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்ந்தம் போடப்பட்டது. சுமார்.1.2 லட்சம் முதலீடுகளும் ஈர்க்கப்பட்டதாகவும் இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தசூழலில்தான் முதல்வர் விஜய்யின் இந்த வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொழில் முதலீட்டாளர்களை சந்திப்பது மட்டுமின்றி, லண்டனில் வசிக்கும் தமிழ் மக்களுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+