ரூ.1000 கோடி முதலீடு.. லண்டனில் விஜய் போட்ட டீல்.. ஆனா கம்பெனி பெயர் ரகசியமாம்! வெடிக்கும் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: லண்டனில் தமிழ்நாடு முதல்வர் முதலீடு தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பு இப்போது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது ரூ.1000 கோடி முதலீடு செய்யும் நிறுவனம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தின் பெயர் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. இவ்வளவு பெரிய முதலீடு செய்யும் நிறுவனத்தின் பெயரை ரகசியமாக வைப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ளதாக கூறப்பட்டாலும் முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் எதுவுமே வரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பினர். உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

Vijay

முதலீட்டு ஒப்பந்தம்

முதலில் அவர், அஜித் குமார் பங்கேற்ற கார் ரேஸை தொடங்கி வைத்திருந்தார். முதலீடுகளை ஈர்ப்பதாக சென்றுவிட்டு, கார் ரேஸை தொடங்கி வைப்பது உள்ளிட்ட செயல்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தான் இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் இன்று தில அறிவிப்புகள் வெளியானது. மொத்தம் ரூ.12,000 கோடி முதலீடுகளை ஈர்க்க வகையில், சுமார் 9600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres -GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று (14.09.2026) மேற்கொள்ளப்பட்டது.

ரூ.1000 கோடி

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

பெரிய டீல்

அதேபோல மற்றொரு பதிவில், "இங்கிலாந்து இலண்டன் நகரில் இன்று, சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

வெடிக்கும் சர்ச்சை

இதில் தான் இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது 3 ஒப்பந்தங்களில் இரு நிறுவனங்களின் பெயர்கள் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்து 2000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனத்தின் பெயர் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. வெறுமன இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். இதுவே சர்ச்சையாக வெடித்துள்ளது. இவ்வளவு ரகசியம் ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+