இதைவிட ஒரு பகல் கொள்ளை வேறு இல்லை! சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    ஒரே நாளில் உயர்ந்த கேஸ், பெட்ரோல், டீசல் விலை.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

    இதைவிட ஒரு பகற் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது எனவும் மத்திய அரசை விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    பகல் கொள்ளை

    பகல் கொள்ளை

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரியை 11 முறை உயர்த்தி ரூபாய் 24 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டது. இதைவிட ஒரு பகற் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.

    சமையல் எரிவாயு

    சமையல் எரிவாயு

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய விலை

    புதிய விலை

    புதிய விலை நிர்ணயத்தின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.16, ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 92.19, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 967 என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதோடு, அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

    மக்களின் மீது சுமை

    மக்களின் மீது சுமை

    குறிப்பாக, டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்து அனைத்து பொருட்களின் விலையும் உயருகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசை பொறுத்தவரை மக்களின் மீது சுமையை ஏற்றுகிற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்கள் மீது சுமையை ஏற்றாமல் மானியங்களை வழங்கி பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டது.

    கடும் போராட்டம்

    கடும் போராட்டம்

    ஆனால், பா.ஜ.க. அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசின் இந்த விலைவாசி உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+