என்னங்க பண்ணி வச்சுருக்கீங்க? ராகுலுக்கே தண்ணி காட்டிய தமிழக காங்., தலைகள்! மா.த. பட்டியலில் கோட்டா?
சென்னை: சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய பட்டியல் வெளியானது. மாநில தலைவர்களுக்கு மாவட்ட தலைவர்கள் என்ற இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என டெல்லி தலைகளை களமிறக்கி இருந்தார் ராகுல் காந்தி. அதே நேரத்தில் அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக வழக்கம் போலவே மாவட்ட தலைவர் பட்டியலில் ராகுலுக்கே தெரியாமல் வேலையை காட்டி இருக்கின்றனர் உள்ளூர் தலைகள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் 71 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் பட்டியல் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிய தலைவர்களாகவே இருந்தனர். ஒரு சிலருக்கு மட்டுமே மீண்டும் மாவட்ட தலைவர்களாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது கட்சிக்குள் பெரிய அரசியல் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டிய அறிவிப்பாகத் தோன்றினாலும், அந்தப் பட்டியலை பார்த்த உடனேயே தமிழக காங்கிரஸில் பலர் மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகி இருக்கிறார்கள். காரணம், மாவட்டத் தலைவர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைமை முன்கூட்டியே ஏற்படுத்திய எதிர்பார்ப்புகள்தான்.

தமிழ்நாடு காங்கிரஸ்
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு "மாநில தலைவர்களுக்கே மாவட்ட தலைவர்கள்" என்ற அடிப்படையில் மாவட்டத் தலைவர்களை நியமிக்கும் பழைய முறையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் ராகுல் காந்தி இந்த முறை புதிய நடைமுறையை கொண்டு வந்தார். கட்சிக்காக உண்மையிலேயே உழைத்தவர்கள், நீண்ட கால விசுவாசம் கொண்டவர்கள் மாவட்டத் தலைவர்களாக வர வேண்டும் என்பதே அவரது நோக்கம். அதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில், தமிழகத்தில் மாவட்டத் தலைவர் தேர்வுக்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்த 35 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராகுல் காந்தி உத்தரவு
அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு வார காலம் தங்கி, உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை சந்தித்தனர். ஒவ்வொருவருடனும் தனித்தனியாக நேர்காணல் நடத்தி, அவர்களின் கட்சி பணி, போராட்ட அனுபவம், அமைப்புத் திறன் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, தகுதியான ஆறு பேரின் பட்டியலை காங்கிரஸ் தலைமைக்கு சமர்ப்பித்ததாக கூறப்பட்டது. இந்த நடைமுறையை பார்த்த பல காங்கிரஸார், இந்த முறை எப்படியும் நியாயமான தேர்வு நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நேர்காணலில் ஆர்வமாக பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர் பட்டியல்
தங்களது கட்சி செயல்பாடுகள் குறித்த ஆவணங்களுடன் வந்து, மாவட்டத் தலைவர் பதவிக்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களும் அதிகம். ஆனால், இறுதியில் வெளியான பட்டியல் அந்த நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானதாகவே இருந்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் புலம்பல் எழுந்துள்ளது. ராகுல் காந்தியின் எண்ணத்துக்கு மாறாக, வழக்கம்போலவே "இட ஒதுக்கீடு" இந்த முறைவும் மேலோங்கி விட்டதாக பலர் குற்றம்சாட்டுகின்றனர். நீண்ட காலமாக காங்கிரஸுக்காக உழைத்து தேய்ந்தவர்களை ஓரமாக தள்ளிவிட்டு, இடையில் தமாகா உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கே மாவட்டத் தலைவர் பதவி கிடைத்துள்ளதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
காங்கிரஸ் உட்கட்சி அரசியல்
இதற்கு எடுத்துக்காட்டாக, தென்காசி மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆலங்குளம் செல்வக்குமார், பீட்டர் அல்போன்ஸின் நெருங்கிய ஆதரவாளர் என்றும், மூப்பனார் மற்றும் வாசன் தலைமையில் தமாகா-வுக்கு சென்று வந்த பின்னணியுடையவர் என்றும் விமர்சனம் எழுகிறது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத் தலைவராக வந்துள்ள ராஜாராம் பாண்டியன், முன்னாள் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமியின் சிபாரிசில் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில், ப.சிதம்பரத்தின் விருப்பப்படி சஞ்சய் கணபதி மீண்டும் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதும் பேசுபொருளாகி உள்ளது.
தலைவர் நியமன சர்ச்சை
இதற்கு முன்பு, சத்தியமூர்த்தி என்பவரை பதவியில் இருந்து நீக்கி சஞ்சயை கொண்டு வந்ததும் சிதம்பரத்தின் முடிவே என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே நிலவி வந்தது. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் சிதம்பரம் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோருக்குள் 'பகிர்ந்து கொள்ளப்பட்டதாக' காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தெற்கு மாவட்டத்துக்கு சிதம்பரத்தின் விசுவாசியான மணிகண்டனும், வடக்கு மாவட்டத்துக்கு பெனட்டும், திருச்சி மாநகர மாவட்டத்துக்கு ரெக்ஸும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் குழப்பம்
இவ்வாறு பல மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான காட்சியே அரங்கேறியுள்ளதாக கட்சிக்குள் பேசப்படுகிறது. இவை அனைத்தும் தற்போது வெளிச்சத்திற்கு வந்த தகவல்களே என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் முழுப் பட்டியலிலும் யாருக்கு எவ்வளவு கோட்டா வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரங்கள் வெளிப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே












Click it and Unblock the Notifications