Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல்கிட்ட போய் சொல்லுங்க! கூட்டமாக டெல்லிக்கு செல்லும் காங்கிரஸ் தலைகள்.. தூக்கப்படும் "தலைவர்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கடந்த வாரம் சந்தித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசு. இதில் முக்கியமான சில ஆலோசனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றத்தில் இந்த முறை சிறிய தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த மாதமே மாற்றப்பட வேண்டியவர் இன்னும் மாற்றப்படவில்லை. ஆனால் அது நிரந்தரம் கிடையாது. சிறிய இடைவெளிக்கு பின் தலைவர் மாற்றப்படுவார். கே .எஸ் அழகிரிக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 Tamil Nadu congress leaders are travelling to Delhi to change the state chief

கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி உள்ளார். சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது. அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கும் கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உரசல்: இன்னொரு பக்கம் கட்சிக்கு உள்ளேயும் நிறைய கோஷ்டி மோதல்கள் நிலவி வருகின்றன. பொதுவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிறைய கோஷ்டி மோதல் இருக்கும். அந்த கோஷ்டி மோதல் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாக வெடித்தது.

ஜோதிமணி எம்பி, கோபண்ணா போன்றவர்கள் பொது தளத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தெல்லாம் விவாதம் செய்தனர். இப்போது இந்த கோஷ்டி மோதல் உச்சம் தொட்டுள்ளது. அப்போதே காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தன.

விரைவில் மாற்றம்: இந்த நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம்.

டெல்லி பயணம்: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கடந்த வாரம் சந்தித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசு. அந்த சந்திப்பில், திமுகவுக்கு நெருக்கமாக இருக்கும் அழகிரியை (தமிழக காங்கிரஸ் தலைவர்) மாற்ற வேண்டும் என எல்லோரும் சொல்லியும் நீங்கள் மாற்ற மறுக்கிறீர்கள் எனில் என்ன அர்த்தம்?

மு.க. அழகிரியை மட்டுமே வைத்து இந்த தேர்தலை நடத்திக் கொள்கிறீர்களா? என்று கோபம் காட்டியுள்ளார் திருநாவுக்கரசு. லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் வரும் போதும் அவர் இருந்தால் கட்சி பணிகள் முடங்கும். பலர் வேலை செய்ய மாட்டார்கள். அது இந்தியா கூட்டணிக்குத்தான் சிக்கல் இருக்கும், என்றுள்ளார்.

அதற்கு கார்கே, ''என்கிட்டே கோபப்படுறதை விட்டுட்டு ராகுலிடம் பேசுங்கள்'' என்று மட்டும் சொல்ல, ''அவரிடம் பேசுவதற்கு அவர் நேரம் ஒதுக்கித்தர மாட்டேன்கிறார் என்பதால் தானே உங்களிடம் விவாதிக்கிறோம். இதை நீங்கள் சொல்லுங்களேன்'' என்று ஆதங்கப்பட்டுள்ளார் திருநாவுக்கரசு. இதற்கிடையே ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து சோனியாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதேசமயம், கார்கேயை சந்தித்து அழகிரி மாற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை கடிதத்தை முறைப்படி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+