Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் மேல பாசமெல்லாம் இல்ல.. பெருந்தகை மேல காண்டு அவ்வளவு தான்! மாணிக்கம் மீது பகீர் புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல் வலுவாகி இருக்கும் நிலையில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கும், எம்பி மாணிக்கம் தாகூருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. உண்மையில் மாணிக்கம் தாகூருக்கு காங்கிரஸ் மேல் எல்லாம் அக்கறை இல்லை எனவும், செல்வப் பெருந்தகை மீதான தனிப்பட்ட வெறுப்பே இவ்வளவு பிரச்சனைக்கும் மூல காரணம் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

1996இல் தமிழ் மாநில காங்கிரஸ், 2001இல் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயக முன்னணி வரிசையில் 2021ல் காங்கிரஸ் மீண்டும் உடைபடும் சூழல் உருவாகி இருக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தான் இதற்கு முக்கிய காரணம்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் விஜய் வலை விரித்தது காங்கிரஸ் கட்சிக்கு தான். தேசிய அளவிலான ராகுல் காந்தியின் செல்வாக்கு நிச்சயம் தனக்கு உதவும் என நம்பும் விஜய், காங்கிரஸ் கட்சியை எப்படியாவது கூட்டணிக்கு அழைத்து வரவேண்டும் என விரும்புகிறார்.

Congress DMK Selva Perunthagai Manickam Thakur

தமிழக காங்கிரஸ் பிளவு

தமிழகத்தில் ஒரு காலத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. ஒன்றிரண்டு எம்எல்ஏக்களுக்கு கூட திமுகவின் தயவை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தான் திமுக அமைச்சர்கள் அவ்வப்போது காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில் திமுக ஆட்சியில் பங்கு தர வேண்டும், கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற பேச்சுகள் காங்கிரஸ் கட்சியில் எழுந்தது. இதனை ரசிக்காத திமுக தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை கூடுதல் தொகுதிகளையும் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

செல்வப் பெருந்தகை

இந்த நேரத்தில் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என செல்வ பெருந்தகை, ப சிதம்பரம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் விஜயுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கேஎஸ் அழகிரி, எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் கூறி வருகின்றனர். இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் உடைபடும் சூழல் உருவாகி உள்ளது.

மாணிக்கம் தாகூர் மோதல்

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோரும், திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட வரும் காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் என பேச்சுகள் அடிபடுகிறது. இது நடக்கிறதோ இல்லையோ கூட்டணி தொடர்பாக காங்கிரஸில் இரு கோஷ்டிகள் உருவாகி மோதலில் ஈடுபட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. குறிப்பாக செல்வ பெருந்தகை, எம்பி மாணிக்கம் தாகூர் இடையே கடும் மோதல் நிலவுகிறது. குறிப்பாக மாணிக்கம் தாகூரின் தனிப்பட்ட வெறுப்பு தான் இவ்வளவு பிரச்சனைக்கும் மூல காரணம் என்கின்றனர்.

பெருந்தகை Vs தாகூர்

கடந்த மக்களவைத் தேர்தலின் போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால் பல தொகுதிகளில் குறிப்பாக கம்யூனிஸ்ட் வேட்பாளர்களே லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். திமுக தனக்கு ஒழுங்காக வேலை செய்யவில்லை என்ற அதிருப்தி, தனக்காக திமுகவிடம் பேசவில்லை என்ற செல்வப் பெருந்தகை பெருந்தகைக்கு எதிரான மாணிக்கம் தாகூரின் கோபம்தான் தற்போது கூட்டணி விவகாரமாக வெடிக்கிறது என்கின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

மேலும் செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வந்த பிறகு திமுகவுடன் பேசி எம்பி எம்.எல்.ஏக்களை பெற்று கொடுத்தார். மேலும் ஈரோடு சட்டமன்றத் தேர்தலில் முதலில் திருமகன் ஈவேராவை போட்டியிட வைக்க வேண்டும் என தீவிரமாக பேசியவரும் செல்வ பெருந்தகை தான். இரண்டாவது இடைத்தேர்தலின் போது தான் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு அந்த தொகுதி சென்றது. 2026லிலும் கணிசமான தொகுதிகளை பெற்று தருகிறேன் என செல்வ பெருந்தகை கூறியிருக்கிறார். இப்படி செல்வபெருந்தகையின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் மாணிக்கம் தாகூரின் கோபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. சேர்ந்தே இருப்பது காங்கிரஸ் கோஷ்டி பூசலும் என்பார்கள். அது 2026லும் எதிரொலிக்கிறதா? காங்கிரஸ் உடையுமா? தனிப்பட்ட செல்வாக்கு - தனிப்பட்ட கோபம் தேர்தலில் எதிரொலிக்குமா? என்பதுதான் தற்போதைய கேள்வி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+