தமிழகத்தில் ஒரே நாளில் 19 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.. 113 பேர் மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் 18,692 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 113 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 18,692 பேருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு 113 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,66,756 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 14,046 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தினசரியும் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிடுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 18,692 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்தவர்கள் எத்தனை பேர்
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,66,756 ஆகும். இன்று ஒரே நாளில் 16,007 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 10,37,582 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

1,43,571 கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் இன்று 1,15,128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,43,571 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,26,62,407 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2,22,78,880 பேருக்கு பரிசோதனை
இன்று ஒரே நாளில் 1,38,235 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,22,78,880 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 265 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன.

113 பேர் மரணம்
இன்று ஒரே நாளில் 113 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். இரண்டாவது நாளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 14,046 பேராக அதிகரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications