தமிழகத்தில் 5017 பேருக்கு புதிதாக இன்று கொரோனா தொற்று... உயிரிழப்பு 71!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 5017 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 71 பேர் தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 6,30,408 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்னும் 45,279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் இன்று 1306 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்பு குறைந்து வந்த கொரோனா தொற்று சென்னையில் சமீப நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது.

Tamil Nadu Corona updates: 5017 new corona cases; death 71

சென்னையில் இதுவரை மொத்தம் 175,484 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் சென்னையில் 12,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 9,917 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 3318 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 79,279 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து இன்று மட்டும் 5,548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 25 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இன்று சென்னைக்கு அடுத்து கோவையில் அதிகபட்சமாக 434 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tamil Nadu Corona updates: 5017 new corona cases; death 71
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+