தமிழகத்தில் இன்று 5,950 பேருக்கு கொரோனா உறுதி.. சென்னை, கோவையில் பலி 'கிடுகிடு' உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 125 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 22 பேரும், கோவையில் 14 பேரும் பலியாகி உள்ளனர்.,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே உள்ளது. தொற்று எண்ணிக்கை 5500ஐ கடந்த நிலையிலேயே இருக்கிறது.
உயிரிழப்பு எண்ணிக்கையும் தினசரி 100ஐ கடந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தாலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எத்தனை பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,78,270 பேர் மீண்டுள்ளனர்.

சென்னையில் அதிக பலி
கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில 125 பேர் மரணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது, சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதேபோல் கோவையில் இன்று கொரோனா தொற்றால் 14 பேர் பலியாகி உள்ளனர்.

ஆயிரத்தை கடந்தது
சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116,650 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 11498 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இன்று ஒரே நாளில் 1009 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளனர்.

செங்கல்பட்டு திருவள்ளூர்
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளூரில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. திருவள்ளூரில் 488 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 436 பேரும், கோவையில் 395 பேரும், காஞ்சிபுரத்தில் 307 பேரும், வேலூரில் 264 பேரும், தேனியில் 205 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையில் 187 பேரும், கடலூரில் 185 பேரும், சேலத்தில் 177 பேரும், ராணிப்பேட்டையில் 152 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 19 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பரிசோதனை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,450 மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 37,11,246 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிநபர் அடிப்படையில் பார்த்தால் இன்று ஒரே நாளில் 68,444 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது இதில் 5,950 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை 35,81,939 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 3,38,055 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications