தமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 356 பேருக்கு தொற்று!
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,87,554 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு கொஞ்சம் அதிகமாக உள்ளது.
பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்புநிலையை நோக்கி சென்றுவிட்டன. 7 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு
தமிழகத்தில் டிசம்பர் 4ம் தேதி நிலவரப்படி சுகாதாரத்துறை கொரோனா நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இன்று கொரோனா தொற்றால் 1391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,87,554 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பலி
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் 15 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் 11762 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 4 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,426 பேர் மீண்டனர். தமிழகத்தில் இதுவரை 7,64,854 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

சென்னையில் அதிகம்
சென்னையில் 356 பேருக்கும், கோவையில் 139 பேருக்கும், சேலத்தில் 75 பேருக்கும், திருவள்ளூரில் 66 பேருக்கும், திருப்பூரில் 61 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 85 பேரும்., ஈரோட்டில் 49 பேரும், நீலகிரியில் 43 பேரும், திருவண்ணாமலை மற்றும் மதுரையில் 34 பேரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பரிசோதனை எவ்வளவு
தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடக்கிறது. இன்று மட்டும் 70,378 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,23,34,447 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 69,903 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,20,41,933 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 10,938 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications