Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. சென்னை, கோவை செங்கல்பட்டில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில். இன்று கொரோனா பாதிப்பு 2,089 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,77,279 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: இன்றைய கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டியது!

    சென்னையில் இன்று ஒரே நாளில் 775 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4785 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. மாஸ்க் அணிவதை பலரும் பெரிதாக விரும்பாத காரணமே பாதிப்பு இந்த அளவிற்கு மீண்டும் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையின் தாக்கம் எப்படிஇருக்கும் என்ற அச்சமும் மக்களிடம் அதிகரித்து வருகிறது.

    இன்றைய பாதிப்பு

    இன்றைய பாதிப்பு

    ஏனெனில் இன்று ஒரே நாளில் 2,089 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,77,279 ஆக உயர்ந்துள்ளது.

    சிகிச்சை எத்தனை பேர்

    சிகிச்சை எத்தனை பேர்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,241 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,52,463 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,318 இல் இருந்து 12,157 ஆக உயர்ந்துள்ளது.

    அதிக மரணம்

    அதிக மரணம்

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12,659 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 4 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரையில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

    80000 சோதனைகள்

    80000 சோதனைகள்

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 84,759 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,89,40,627 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 85,173 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 1,92,62,447 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் அதிகம்

    சென்னையில் அதிகம்

    தமிழத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் மிக அதிகமாக பரவி வருகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 775 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 186 பேருக்கும், கோவையில் 185 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 110 பேருக்கும், தஞ்சாவூரில் 66 பேருக்கும், கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+