3 மாதங்களில் கடன் ரூ.20,881 கோடி! வட்டி மட்டும்.. ரூ.14,618 கோடி! பெரிய சுழலில் சிக்கிய தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.20,881 கோடி கடன் பெற்றிருப்பதாகவும், ஆனால் வட்டி மட்டுமே ரூ.14,618 கோடி செலுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படி எனில் வாங்கிய கடனில் வட்டி கட்ட.. முக்கால்வாசி செலவாகிறதா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் திமுக அரசு ஏராளமாக கடன் வாங்கியிருக்கிறது என்றும், தமிழக மக்கள் தலையில் திமுக கடனை வைத்து சென்றிருக்கிறது என்றும் தவெக தொடர்ந்து விமர்சித்து வந்தது.

Tamil Nadu Debt Crisis

கடனும் வட்டியும்

ஆனால், தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், மாநில அரசு சார்பில் கடன் பெற்றிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சரி இப்போதைய சூழலில் கடன் இல்லாமல் எந்த அரசையும் நடத்த முடியாதுதான். அப்பேர்ப்பட்ட அமெரிக்காவுக்கே ஏகப்பட்ட கடன் இருக்கிறது. அந்த வகையில் தமிழகமும் கடன் பெற்று சில திட்டங்களை செயல்படுத்த வேண்டி இருக்கிறது. ஆனால், இங்கு பிரச்சனை வெறும் கடன் மட்டுமல்ல.. கடனுக்காக கட்டப்படும் வட்டிதான்.

ரூ.20,881 கோடி கடன் வாங்கி.. யாராசும் ரூ.14,618 கோடி வட்டி கட்டுவாங்களா? இது பெரிய சூழல் மாதிரி இருக்கு. தமிழகம் இதிலிருந்து விடுபட வேண்டும். சொந்த வருவாயை அதிகரிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தின் வருவாய்

மாநிலத்தின் சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி என பல வகைகளில் மாநில அரசுக்கு வருவாய் இருக்கிறது. இதெல்லாம் இருந்தாலும் சொற்பமான அளவில்தான் வருமானம் கிடைக்கிறது. எனவே, இந்த வருமானத்தை அதிகரித்து.. மாநில அரசு கடன் வாங்கும் விகிதத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர்.

தமிழகத்தின் கடன் திட்டம்

இந்த ஆண்டு மட்டும் மொத்தம் ரூ.1.22 லட்சம் கோடியை கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. தற்போது தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருகிறது. இதற்கு மாத மாதம் 22.82 சதவிகிதம் வட்டியை நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அப்படியெனில் இந்த ஆண்டு வட்டிக்கு மட்டும் ரூ.76,452 கோடி செலுத்த வேண்டும். வாங்குற கடன் ரூ.1.22 லட்சம்தான். ஆனால், அதில் முக்கால்வாசி வட்டிக்கே சரியாக போய்விடுகிறது. இதே நிலைமை நீடித்தால் தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிடும் என்பதே பல்வேறு தரப்பினரின் எச்சரிக்கையாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+