தமிழகத்தை மிரட்டுது டெங்கு.. தினசரி அதிகரிக்கும் பாதிப்பு! ஹை அலர்ட்டில் அரசு! மக்களுக்கும் அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் 300க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பதும், இதுவரை 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக நடப்பாண்டில் 17949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றம், அவ்வப்போது பெய்து வரும் மழை மற்றும் பல்வேறு இடங்களில் தேங்கும் மழைநீர் ஆகியவை காரணமாக டெங்குவை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Dengue

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி டெங்கு பாதிப்பு 200 முதல் 250 என்ற அளவில் இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

டெங்கு காய்ச்சல்

இதற்கு முந்தைய நாட்களின் நிலவரத்தை பார்க்கும் போது, செப்டம்பர் 16ஆம் தேதி 283 பேருக்கும், 17ஆம் தேதி 244 பேருக்கும், 18ஆம் தேதி 253 பேருக்கும் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. அதேபோல், செப்டம்பர் 19ஆம் தேதி 224 பேருக்கும், 20ஆம் தேதி 228 பேருக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு தினசரி பாதிப்பு தொடர்ந்து 200ஐ கடந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு பாதிப்பு

இதுவரை தமிழகம் முழுவதும் 17,949 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 79 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஸ்கிராப் தைப்போஸ் எனப்படும் உன்னிகாய்ச்சல் பாதிப்பு காரணமாக 4656 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமாக உள்ளது.

தமிழக அரசு

இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு பாதிப்பை விட இந்த பாதிப்பு குறைவாக இருக்கிறது என புள்ளி விவரங்கள் சொன்னாலும், கடந்த சில தினங்களாக பாதிப்பு உறுதி செய்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காய்ச்சல் பாதிப்புகள்

தற்போது பருவமழை தாமதமாக தொடங்கினாலும் அதீத வெப்பம் நிலவுகிறது. மழை பெய்தாலும் பகலில் வெப்பம் சுட்டெரிக்கிறது. மாலை நேரங்களில் மழை பெய்யும் நிலையில் பகல் நேர வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். திடீர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை தேங்குவதும் கொசு உற்பத்தியை அதிகரித்து டெங்கு பரவலுக்கு காரணமாக அமைவதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.

சுகாதாரத்துறை

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பது வழக்கம் தான். அதே நேரத்தில் பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கா வண்ணமும், வீடுகளுக்குள் கொசுக்கள் புகார் வண்ணமும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும், வீட்டு முறை வைத்தியம் மற்றும் தாங்களாகவே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூடாது என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+