பேய் மாதிரி பயமுறுத்தும் டெங்கு.. ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா? நிரம்பி வழியும் ஹாஸ்பிடல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில், மழைநீர் தேங்கும் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதற்கான சூழல் உருவாகியுள்ளதால், டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 133 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் எண்ணிக்கை அடுத்த நாளே 283 ஆக உயர்ந்தது. செப்டம்பர் 17ஆம் தேதி 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Dengue

இந்த நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக 200க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

டெங்கு காய்ச்சல்

2026ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 3,476 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான 18 நாட்களில் மட்டும் 3,096 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2,10,574 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 16,830 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

253 பேருக்கு டெங்கு

மாவட்ட வாரியான நிலவரத்தை பார்க்கும்போது, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 மாவட்டங்களில் மட்டும் 187 டெங்கு நோயாளிகள மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகினறனர். மற்ற மாவட்டங்களில் 57 பேர் டெங்கு பாதிப்புக்காக உள்நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர். இதன்படி, மாநிலம் முழுவதும் தற்போது 244 பேர் டெங்கு பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதாரத்துறை

டெங்கு பாதிப்பு மட்டுமின்றி, பல்வேறு வகையான காய்ச்சல்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காய்சசல் காரணமாக 1,320 பேர் மருத்துவமனைகளில் உளநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் டெங்கு

இதற்கிடையே, சென்னையில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மழைக்குப் பிறகு வீடுகள், கட்டுமானப் பகுதிகள், காலி மனைகள், தொட்டிகள், பழைய டயர்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு அறிகுறிகள்

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், நேற்றை பாதிப்பு எண்ணிக்கை வெளியாகும் பட்சத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலா, என சொல்லப்படுகிறது. இதற்கிடையே, காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல் வலி, கண்களுக்குப் பின்புறம் வலி, வாந்தி, தோலில் தடிப்புகள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+