காலையில் டுவிட்டர தொறந்தா.. அசத்திய ஓபிஎஸ்... அற்புதமான #FriendshipDay வாழ்த்து
சென்னை: இன்று உலகம் முழுதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது.

நண்பர்கள் தினம் என்பது வெறும் கொண்டாட்ட நாள் என்பது மட்டும் இல்லை. அன்றைக்கு நம்முடைய பழைய நண்பர்கள், உற்ற நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தவறவிட்ட நட்புகள் ஆகியோரின் நினைவுகளை திரும்பி பார்க்க வைப்பதோடு, பல விஷயங்களை அசைபோட தூண்டும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
— O Panneerselvam (@OfficeOfOPS) August 4, 2019
இடுக்கண் களைவதாம் நட்பு
எனும் வள்ளுவர் கூற்றின்படி, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் உற்ற காலங்களில் உடனிருந்து உதவும் உறவாகிய நட்பினை சிறப்பிக்கும் இத்தினத்தில், அனைவருக்கும் #FriendshipDay நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மனம் மகிழ்கிறேன்.
எல்லாருக்குமே நண்பர்கள் இருப்பார்கள் நண்பர்கள் இல்லாதவர்கள் நடைபிணம் போல் தான் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லலாம்.
சரி விஷயத்துக்கு வருவோம். இந்த நன்நாளில் டுவிட்டரை திறந்த உடன் காலையில் கண்ணில் பட்டது எல்லாம் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தான். அதிலும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நண்பர்கள் தின வாழ்த்துக்களை திருக்குறளை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
எனும் வள்ளுவர் கூற்றின்படி, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் உற்ற காலங்களில் உடனிருந்து உதவும் உறவாகிய நட்பினை சிறப்பிக்கும் இத்தினத்தில், அனைவருக்கும் #FriendshipDay நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மனம் மகிழ்கிறேன்." என கூறியுள்ளார்.
ஒ பன்னீர்செல்வம் மட்டுமல்ல பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications