"புனிதர்".. சட்டென வாடிகனுக்கு பறக்கும் திமுக அமைச்சர்கள்.. தமிழ்நாட்டிலேயே முதல்முறை! பெரிய கவுரவம்
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோதங்கராஜ் ஆகியோர் ரோம் செல்ல உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம் பிள்ளை. பிறப்பில் இந்துவான இவர் கடந்த 18ம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்.
நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் "லாசர்" (Lazarus) என்று பொருள்படும் வகையில் "தேவசகாயம்" என்ற பெயரை மாற்றிக்கொண்டார்.

தேவசகாயம் பிள்ளை
சிறுவயதில் இருந்தே சமஸ்கிருதம், தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் இவர் புலமை பெற்று இருந்தார். மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் கருவூல அதிகாரியாக இவர் பணியாற்றி வந்தார். நாயர் பிரிவில் பிறந்த இவர், கிறிஸ்துவ மதம் மாறினார். அப்போது திருவாங்கூர் அரசரின் கட்டளை படி உயர் வகுப்பினர் மதம் மாற கூடாது. ஆனால் இவர் மீறி மதம் மாறியதால் அரசின் தண்டனைக்கு உள்ளானார் என்பது வரலாறு.

கொல்லப்பட்டார்
இதனால் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மதம் மாறிய பின் சிறை தண்டனை பெற்றவர் கடுமையான கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. கிறிஸ்துவ மதம்தான் தன்னை காத்ததாக இவர் தெரிவித்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன. இந்தியாவில், முக்கியமாக தென்னிந்தியாவில் கிறிஸ்துவம் பரவ இவர் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தார்.

நட்பாக இருந்தார்
மதம் மாறிய பின்னர் இவர் அப்போது தாழ்த்தப்பட்ட மக்களிடம் நெருக்கமாக நட்பாக இருந்துள்ளார். அவர்கள் ஒன்றாக உணவருந்த சென்றுள்ளார். அவர்களின் வீடுகளில் தங்கி இருக்கிறார். வேறு சமூகத்தை சேர்ந்தவரின் வீட்டில் இவர் இருந்தது, நட்பாக பழகியதை அப்போது இவரின் சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்த்து இவருடன் சண்டைக்கு சென்றுள்ளனர். பின்னர் அது மன்னரிடம் தெரிவிக்கப்பட்டு, இவர் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டது வரலாறு.

புனிதர் பட்டம்
கடந்த ஆண்டு தேவசகாயம் புனிதர் பதவிக்கு தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலையில், பேராயர் தேவசகாயத்திற்கு இத்தாலியிலுள்ள வாடிகன் நகரிலுள்ள ரோமில் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட உள்ளது. போப் ஆண்டவர் வரும் மே- 15 தேதி புனிதர் பட்டத்தை இவருக்கு அறிவிக்கிறார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே முதல்முறையாகும்.

வெளிநாடு பயணம்
அவரை கவுரவபடுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ரோம் செல்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் வாடிகனில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்த இவர்கள் நாளை காலை 9.30 மணிக்கு சென்னையில் விமானம்மூலம் இத்தாலி செல்கிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் புனிதர் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வு அதிக கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications