சென்னையில் கொரோனா புதிய உச்சம்...5829 பேர் பாதிப்பு - 47 பேர் மரணம்
தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 5829 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 47 பேர் சென்னையில் மரணமடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் ஒரே நாளில் 5829 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 5693 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 31475 பேர் சென்னை மாநகரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு தற்போது பல்கி பெருகி வருகிறது. இந்த நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது.
மாவட்ட அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இன்றைய தினம் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 5829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இது ஒருநாள் பாதிப்பில் புதிய உச்சமாகும்.

சென்னையில் புதிய உச்சம்
தமிழக தலைநகர் சென்னை கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று ஒரே நாளில் 5829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 5693 சென்னை இன்று ஒரே நாளில் 47 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கோவை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 1257 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மதுரையில் 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் 378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 521 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. திருப்பூரில் 438 பேரும், திருச்சியில் 528 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில் 492 பேரும் தேனியில் 363 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினசரியும் அதிகரிப்பு
காஞ்சிபுரத்தில் 473 பேருக்கும்,திருவள்ளூரில் 779 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தூத்துக்குடியில் 638 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியானது. திருநெல்வேலியில் 812 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
அரியலூரில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கும் கடலூரில் 330 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. தருமபுரியில் 175 பேருக்கும், திண்டுக்கல்லில் 220 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 187 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகரில் அதி தீவிரம்
விழுப்புரத்தில் 354 பேரும், வேலூரில் 442 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. விருதுநகரில் 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications