22 மாவட்டங்களில் சரசரவென சரிந்த கொரோனா.. உற்சாகம் தரும் மாற்றம்.. இன்றைய மாவட்ட நிலவரம்!
சென்னை: தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 22 மாவட்டங்களில் 1000க்கும் குறைவான நபர்களே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. இதேபோல் மீதமுள்ள பல மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு 150க்கும் கீழ் தான் இருந்தது.
வெறும் 5 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கை 200ஐ தாண்டி உள்ளது.
தமிழகத்தில் நேற்று 51,215 பேர் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 50,213 பேர் மட்டுமே நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 6,599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 11029 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 4032 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக கடலூர் மாவட்டத்தில் 3657
பேரும், சேலத்தில் 2358 பேரும், செங்கல்பட்டில் 2615
பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்

சென்னை கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 5,684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாவட்ட நிலவரம் என்று பார்த்தால் சென்னையில் கொரோனாவால் இன்று 988 பேர் பாதிக்கப்பட்டுளளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 446 பேரும், கடலூரில் 407 பேரும், செங்கல்பட்டில் 364 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 242 பேரும், திருவள்ளூரில் 277 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் நிலவரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 121 பேரும், ஈரோட்டில் 121 பேரும், கள்ளக்குறிச்சியில் 138 பேரும், கன்னியாகுமரியில் 95 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 110 பேரும், நாகப்பட்டினத்தில் 21 பேரும், புதுக்கோட்டையில் 116 பேரும், ராணிப்பேட்டையில் 121 பேரும், சேலத்தில் 164 பேரும், தஞ்சாவூரில் 128 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் மிக குறைவு
திருவாரூரில் 198 பேரும், தூத்துக்குடியில் 98 பேரும், திருநெல்வேலியில் 135 பேரும், திருச்சியில் 98 பேரும், வேலூரில் 148 பேரும், விழுப்புரத்தில் 126 பேரும், விருதுநகரில் 109 பேரும், தர்மபுரியில் 59 பேரும், கரூரில் 46 பேரும், கிருஷ்ணகிரியில் 83 பேரும், நாமக்கல்லில் 94 பேரும், நீலகிரியில் 76 பேரும், ராமநாதபுரத்தில் 31 பேரும், அரியலூரில் 45 பேரும். பெரம்பலூரில் 15 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற மாவட்டங்களில் நிலவரம்
தமிழகத்தில் கொரோனாவால் 87 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,012 ஆக அதிகரித்துள்ளது.. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் 9 பேரும், சேலம் மற்றும் வேலூரில் தலா 6 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும் பலியாகி உள்ளனர். திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் தலா 3 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications