11, 23, 28, 35, 46, 48.. இதெல்லாம் இன்றைக்கு சில மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு.. முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் 11, 23, 28, 35 35. 46, 48 என்ற அளவில் பல மாவட்டங்களில் தொற்ற பாதிப்பு 100க்கும் கீழாக குறைந்துள்ளது. அதேநேரம், திருப்பூர், கோவை, கடலூர், சேலம், சென்னை. செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
தமிழகத்தில் இன்று 5,693 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பாதி கேஸ்கள், சென்னை, கோவை, கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் இருந்து வந்தவை ஆகும்.
தமிழகத்தில் இன்று 5,717 பேர் குணமாகிவிட்டதால் தற்போது 47,012 மட்டுமே நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 4,47,366 தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் அதிகம்
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 10393 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3495 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக கடலூர் மாவட்டத்தில் 2966 பேரும், செங்கல்பட்டில் 2380 பேரும், திருவள்ளூரில் 2087 பேரும், சேலத்தில் 1982 பேரும், திருப்பூரில் 1717 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவையில் 490 பேர்
தமிழகத்தில் செப்டம்பர் 13ம் தேதி நிலவரப்படி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். சென்னையில் கொரோனாவால் இன்று 994 பேர் பாதிக்கப்பட்டுளளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 490 பேரும், சேலத்தில் 309 பேரும், திருவள்ளூரில் 300 பேரும், கடலூரில் 251 பேரும், செங்கல்பட்டில் 299 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் 151 பேர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 68 பேரும், ஈரோட்டில் 133 பேரும், கள்ளக்குறிச்சியில் 126 பேரும், கன்னியாகுமரியில் 110 பேரும், திருவண்ணாமலையில் 188 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 78 பேரும், நாகப்பட்டினத்தில் 154 பேரும், புதுக்கோட்டையில் 134 பேரும், ராணிப்பேட்டையில் 130 பேரும், தர்மபுரியில் 39 பேரும், தஞ்சாவூரில் 151 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூரில் 143 பேர்
திருவாரூரில் 143 பேரும், தூத்துக்குடியில் 45 பேரும், திருநெல்வேலியில் 126 பேரும், திருப்பூரில் 291 பேரும், திருச்சியில் 86 பேரும், வேலூரில் 106 பேரும், விழுப்புரத்தில் 128 பேரும், விருதுநகரில் 35 பேரும், கிருஷ்ணகிரியில் 67 பேரும், கரூரில் 48 பேரும், நாமக்கல்லில் 124 பேரும், நீலகிரியில் 70 பேரும், ராமநாதபுரத்தில் 16 பேரும், அரியலூரில் 11 பேரும், பெரம்பலூரில் 23 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிலவர்த்தை பார்க்கும் முன்பு கொரோனா அதிகம் இருந்த இடங்களில் தற்போது குறைவதும், குறைவாக இருந்த இடங்களில் அதிகரிப்பதுமாக உள்ளது. உதாரணமாக திருப்பூரில் குறைந்திருந்த கொரோனா தற்போது மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications