வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்கு போட்டி மற்ற மாநிலங்கள் அல்ல.. உலக நாடுகள்தான்.. அடித்து சொன்ன டிஆர்பி!
சென்னை: நேற்று நடைபெற்ற "NDTV தமிழ்நாடு உச்சிமாநாடு 2026"-ல் கலந்துகொண்டு உரையாற்றிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாட்டின் பொருளாதாரப் புரட்சி மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். 'திராவிட மாடல்' ஆட்சியின் கீழ் தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை (11%+) அடைந்துள்ளது.. தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் போட்டியிடவில்லை.. மாறாக மற்ற நாடுகளுடன் போட்டியிடுகிறது என்று தரவுகளுடன் அவர் முன்வைத்தார்.
பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, வளர்ச்சியை வெறும் சென்னை போன்ற மாநகரங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் டிஆர்பி ராஜா தனது பேச்சில், "இன்று தென்காசி, திருவாரூர், மதுரை போன்ற மாவட்டங்களில் புதிய சிப்காட் (SIPCOT) வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. TIDEL Neo பூங்காக்கள் மூலம் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு கிராமப்புற இளைஞர்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுதான் உண்மையான உள்ளடக்கிய வளர்ச்சி தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் போட்டியிடவில்லை.. மாறாக மற்ற நாடுகளுடன் போட்டியிடுகிறது , என்று கூறினார்.
சமூக நீதியும் செயற்கை நுண்ணறிவும் (AI)
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய அமைச்சர், "சென்னைதான் இந்தியாவின் AI தலைநகரம்.. சென்னை வேகமாக வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.. இந்தியாவின் AI தலைநகரமாகச் சென்னை உருவெடுத்துள்ளது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு மக்களுக்கானதாக மட்டும் இருக்கக்கூடாது. AI என்பது ஒரு ஜனநாயக உரிமை. அது கடைக்கோடி மனிதனுக்கும், சிறு குறு நிறுவனங்களுக்கும் பயன்பட வேண்டும். சமூக நீதியின் அடிப்படையில் தொழில்நுட்ப அணுகல் இருப்பதை உறுதி செய்வதே திராவிட மாடல் கொள்கை," என்றார்.
மொழிப் கொள்கை: திணிப்புக்கு மட்டுமே எதிர்ப்பு
தமிழ்நாட்டின் மொழிப் கொள்கை குறித்துத் தேசிய அளவில் நிலவும் தவறான பிம்பங்களுக்கு அவர் விளக்கமளித்தார்: தமிழ்நாடு ஒருபோதும் இந்தி பேசுபவர்களுக்கோ அல்லது அந்த மொழிக்கோ எதிரானது அல்ல. மாநிலத்தில் ஏராளமான இந்தி பேசும் மக்கள், ஜப்பானியர்கள், ஜெர்மானியர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். எங்களுடைய எதிர்ப்பு என்பது 'இந்தி திணிப்புக்கு' மட்டுமே தவிர, அந்த மொழிக்கு அல்ல.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தயார்
அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் சர்வதேச வரி விதிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழகம் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார். முதலமைச்சரின் சமீபத்திய அமெரிக்க, ஐரோப்பியப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தமிழகத்தின் உற்பத்தித் துறையை வலுப்படுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
'டிஸ்ரப்டர்' (Disruptor) விஜய்
அரசியல் ரீதியான கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அவர் தனது கருத்தைப் பதிவு செய்தார். விஜய்யை ஒரு டிஸ்ரப்டர்.. அவர் வெறுமனே சலசலப்பை ஏற்படுத்துபவர்.. அவ்வளவுதான்.. அதற்கு மேல் இல்லை என்று குறிப்பிட்ட அவர், விஜய்யின் வருகை திராவிட இயக்கத்தின் வலுவான கொள்கை அடித்தளத்தையோ அல்லது திமுகவின் வாக்கு வங்கியையோ பாதிக்காது என்று மறைமுகமாக குறிப்பிட்டார்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications