தமிழகத்தில் மொத்தம் 5.77 கோடி வாக்காளர்கள்! வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5.77 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூரும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதியும் இருப்பதாக அறிவிப்பு. அதேபோல டிச.11 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.



Click it and Unblock the Notifications
