குழந்தைகள் சிரப்பில் உயிரைக் கொல்லும் விஷம் கலப்படம்.. மருந்துக் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
சென்னை: குழந்தைகளுக்கு வழங்கப்படும் அல்மாண்ட் கிட் சிரப்புக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அல்மான்ட் கிட் சிரப்பில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எதிலீன் கிளைகால் என்ற நச்சுப்பொருள் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது.
அல்மாண்ட் கிட் சிரப் இருமல் மருந்து விற்பனை மற்றும் விநியோகத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. எத்திலீன் கிளைகால் என்ற உயிருக்கு ஆபத்தான வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அல்மாண்ட் கிட் சிரப் மருந்துக்கு தடை விதித்து உத்தரவு அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பீகார் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 'அல்மாண்ட் கிட்' சிரப்பில் எதிலீன் கிளைகால் என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் கலப்படமானது கண்டறியப்பட்டு உள்ளது. 'அல்மாண்ட் கிட் சிரப்' மருந்தை உட்கொண்டால் கடுமையான உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த மருந்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் உட்கொள்வதற்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை செய்துள்ளது.
மேற்கூறிய மருந்தில் உள்ள எதிலீன் கிளைக்கால் என்ற நச்சு வேதிப்பொருள் சிறுநீரக செயலிழப்பு, மூளை, நுரையீரல் போன்ற வேறு உறுப்புகளையும் பாதிப்படையச் செய்து இறப்பை ஏற்படுத்தக்கூடும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லரை விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்கள் இந்த மருந்தை உடனடியாக விற்பனையில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த மருந்து வினியோகிக்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நுகர்வோர்கள் மருந்துகள் வாங்கும்போது பேட்ச் எண்களை (ஏ.எல்.24002) சரிபார்த்து அதன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
இந்த மருந்தை வைத்திருப்பவர்கள் அதை முறையாக அழிக்க அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்மருந்தின் வினியோகத்தைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள மருந்து கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏதேனும் விளக்கங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் புகார்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் 94458 65400 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்











Click it and Unblock the Notifications