ஒரே கையெழுத்தில் 1 கோடி பேருக்கு பலன்.. ஆதார் கார்டு டூ சாதி சான்றிதழ்.. தமிழக மக்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மின்னணு சான்றிதழ்கள் மிக அதிக அளவில் வழங்கப்பட்டு உள்ளன. வருவாய்த் துறையினை நாடி வரும் பொதுமக்களுக்கு விரைவான சேவையினை அளித்திடும் வகையில், இப்படி மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய தகவல் மையத்தின் தொழில் நுட்ப உதவியோடு அனைத்து மாவட்டங்களிலும் மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது முன்பெல்லாம் ஹார்ட் காப்பி மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இதை மாற்ற உள்ளதாக தேர்தலுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக கணினிகள் வாங்கப்பட்டன. அரசு துறைகள் முழுக்க கணினி முறைக்கு மாற்றப்பட்டன. எல்லாம் டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின் இதற்கான உத்தரவை கையெழுத்து மூலம் போட்டார்.

aadhaar

இதன் மூலம் அறங்காவல் துறை தகவல்கள் கூட டிஜிட்டலாக மாற்றப்பட்டன. அந்த வகையில்தான் வருவாய் துறையிலும் ஆவணங்கள் டிஜிட்டல் வசமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் 89.66 லட்சம் மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 கோடி ஆவணங்கள் ஒரு வருடத்திற்கு டிஜிட்டல் முறையில் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 12,733 பொது சேவை மையங்கள் e-Distrct (Common Service Centres) வாயிலாக கீழ்காணும் 25 வகையான சான்றுகள் மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

1 சாதிச்சான்றுகள்
2 வருமானச் சான்றுகள்
3 இருப்பிடச் சான்றுகள்
4 முதல் தலைமுறை பட்டதாரி சான்றுகள்
5 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றுகள்
6 விவசாய வருமான சான்றிதழ்
7 சிறு, குறு விவசாயி சான்றிதழ்
8 கலப்புத் திருமணச் சான்றிதழ்
9 விதவைச் சான்றிதழ்
10 வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்
11 குடிபெயர்வு சான்றிதழ்
12 இயற்கை இடர்பாடுகளினால் மாணவர்கள் பள்ளி (ம) கல்லூரி சான்றிதழ்களை இழந்தமையை உறுதி செய்யும் சான்று
13 ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
14 திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்
15 வாரிசு சான்றிதழ்
16 வசிப்பிடச் சான்றிதழ்
17 சொத்து மதிப்பு சான்றிதழ்
18 அடகு வணிகர் உரிமம் சான்றிதழ்
19 கடன் கொடுப்போர் உரிமம்
20 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகுப்புச் சான்றிதழ்
21 பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்பதற்கான சான்றிதழ் (வருமானம் மற்றும் சொத்துக்கள்)
22 ஜெயின் மதத்திற்கான சிறுபான்மையினருக்கான சான்றிதழ்
23 ஆதரவற்ற விதவை சான்றிதழ்
24 பொது கட்டடங்கள் உரிமம்
25 தற்காலிக பட்டாசு உரிமம்
26. இணைய வழி விண்ணப்பங்கள்

மேற்கண்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் கொடுக்கப்பட்டதன் மூலம் முதல்வர் ஸ்டாலினின் கனவுகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்த போது ஸ்டாலின் கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று அனைத்தையும் டிஜிட்டல் மையமாக மாற்றுவது. தற்போது அது நிஜமாகி உள்ளது. அடுத்த வருடத்திற்கு இதைவிட கூடுதல் இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+