கண்காணிப்பு வளையத்திற்குள் வந்த பள்ளிகள்.. பள்ளி கல்வித்துறை போட்ட ஆர்டர்! பெற்றோர்களுக்கும் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கவனிக்க தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை வெயில் மிக மோசமாக இருந்தது. எப்போதும் இருக்கும் கோடை காலம் போல இல்லாமல் மிக மிக மோசமாக கோடை வெயில் வாட்டி எடுத்தது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி நேற்று வரை வெப்பநிலை பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

Tamil Nadu Education ministry checking on private schools which collects over fee from parents

இந்த கடும் வெயில் காரணமாக இந்த மாதம் 12 நாட்கள் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 12ம் தேதி 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. 1-5ம் வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் அதன்பின் மீண்டும் 12, 14 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில் மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த திங்கள் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையத்தில் வெயில், மழைக்கு இடையே ஒருவழியாக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கவனிக்க தொடங்கி உள்ளனர்.

கட்டணம்: நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர். அதோடு இது தொடர்பாக பெற்றோர்கள் தங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் அல்லது மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

இலவசம்: இன்னொரு பக்கம் ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை வழங்க இலவச கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 21-Aஇன் கீழ் இது சட்டமாக இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு முறையான பள்ளியில் நிறைவான, சமமான, தரமான முழுநேரத் தொடக்கக் கல்விக்கான வழங்கப்பட வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்படி அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் எப்போதும்போல அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். அதே சமயம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க ஆசைப்பட்டால் அதற்கும் வழி ஏற்படுத்திகொடுக்கப்படும்.

இது தொடர்பாக உதவி மைய எண்ணுக்கு 14417 தொடர்பு கொண்டு விவரங்களை பெற முடியும்.அதன்படி தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளை இந்த திட்டத்தின் கீழ் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.

இந்த தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிலுவை தொகை 364.43 கோடியை சமீபத்தில்தான் தமிழ்நாடு அரசு விடுவித்தது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 8000 தனியார் பள்ளிகளில் பள்ளிக்கு தலா 20 - 25 சதவிகித மாணவர்கள் படிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+