பதம் பார்த்த விஜய்.. போட்டு வைத்திருந்த பிளான் எல்லாம் காலி? புலம்பும் அதிமுக கூட்டணி கட்சிகள்!
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள அன்புமணி, ஜி.கே.வாசன், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், பிரேமலதா ஆகியோர் தங்கள் கட்சிக்கான வெற்றி எப்படி இருக்கிறது என ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். இவர்களில் எல்லோருக்குமே , திருப்தியான ரிசல்ட் வரவில்லையாம்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2011-ல் பதிவான 78.3% என்ற சாதனையை முறியடித்து, தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த பதிவாகக் கருதப்படுகிறது.
2021 தேர்தல் ஒப்பீடு: கடந்த 2021 தேர்தலில் 72.8% வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த முறை சுமார் 12.35% வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. இந்த தேர்தல் அதிமுகவிற்கு மிகவும் முக்கியமான தேர்தல்.
கடந்த 11 தேர்தல்களில் (உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் உட்பட) தொடர் சறுக்கல்களைச் சந்தித்து வரும் அதிமுகவிற்கு, இது 'இறுதிப் போர்' போன்றது. எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்குக் கீழ் கட்சி சந்திக்கப்போகும் மிக முக்கியமான தேர்தல் இது.
இதில் தோல்வியடைந்தால், ஈபிஎஸ் தனது பொதுச்செயலாளர் பதவியைத் தக்கவைப்பது கடினமாகிவிடும். மேலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரின் அழுத்தம் இப்போது இல்லை என்றாலும் மற்ற தலைவர்களின் அழுத்தம் அதிகரித்து,, கட்சி பல துண்டுகளாகச் சிதறும் அபாயம் உள்ளது. இந்தத் தோல்வி அதிமுகவை தமிழக அரசியலில் ஒரு பலவீனமான கட்சியாக மாற்றக்கூடும்.

அதிமுக கூட்டணி கட்சிகள் அப்செட்
அதிமுக கூட்டணியில் உள்ள அன்புமணி, ஜி.கே.வாசன், திமுக கூட்டணி யில் உள்ள திருமாவளவன், பிரேமலதா ஆகியோர் தங்கள் கட்சிக்கான வெற்றி எப்படி இருக்கிறது என ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். இவர்களில் எல்லோருக்குமே, திருப்தியான ரிசல்ட் வரவில்லையாம்.
இதனால் ஏகத்துக்கும் அப் செட்டாகியிருக்கிறார்கள். குறிப்பாக, அதிமுக கூட்டணியில் 18 தொகுதி களில் போட்டியிட்ட அன்புமணியின் பாமகவிற்கு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றியும் , இரண்டு தொகுதிகளில் இழுபறியும் இருப்பதாக அன்புமணிக்கு தகவல் தரப்பட்டுள்ளது. தம்மிடம் தரப்பட்டதரவுகளை அன்புமணி ஆராய்ந்து பார்த்துள்ளார் அன்புமணி.
எல்லாம் சரியாகத்தான் இருந்துள்ளது. அதனால், மிகவும் நொந்துபோயுள்ளார் அன்புமணி. அதேபோல, ஜி.கே.வாசனுக்கு 5 தொகுதிகள் அதிமுகவில் தரப்பட்டது. ஒன்றில் கூட வெற்றி இல்லை என்றே அவருக்கு கிடைத்த தகவல். அதாவது, தமாகா வேட்பாளர்கள் 5 பேரிடமும் விவாதித்துள்ளார் வாசன். ஒருவரும் நம்பிக்கையாக பதில் சொல்லவில்லை யாம்.
விஜய்தான் காரணம்
அதேபோல, திமுக கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிட்ட விசிக வுக்கு 2 இடங்களும், 10 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு 1 இடங்களும் மட்டுமே வெற்றி உறுதியாகத் தெரிகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக, திமுக மற்றும் அதிமுக தலைமையில் உருவான கூட்டணிகளில் போட்டியிட்ட தோழமைக் கட்சிகளுக்கு எதிர்பார்த்த வெற்றி என்பது கேள்விக்குறியாக இருப்பதால், தோழமைக்கட்சிகளிடம் ஒருவித வெறுமை எதிரொலிக்கிறது.
இதற்கு மொத்த காரணமும், விஜய் தான். விஜய்யின் தவெக கட்சி பிரிக்கும் வாக்குகள் பிரதான கட்சிகளின் தோழமைக் கட்சிகளை வெகுவாக பதம் பார்த்துள்ளது. அதாவது, ஜெயிக்க வேண்டிய இடத்தில் தோல்விக்கும், தோல்வியடைய வேண்டிய இடத்தில் வெற்றிக்கு வழிவகுக்கிறதாம் விஜய்யின் தவெக வாங்கும் வாக்குகள் என்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications